இன்று ஒரே நாளில் ரூ.10000 உயர்ந்தது வெள்ளி விலை.. வரலாறு காணாத ஏற்றம்..!
நடுத்தர குடும்பங்களின் கனவாகவும், முதன்மையான சேமிப்பாகவும் விளங்கும் தங்கம், தற்போது எவராலும் எட்ட முடியாத உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. ஒரு சவரன் தங்கம் ஒரு லட்ச ரூபாயை தொட்டுவிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் இருந்து வந்த நிலையில், தற்போது அந்த எல்லையை தாண்டி தங்கம் விற்பனையாவது நுகர்வோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.30 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.12,800 என்ற விலையை எட்டியுள்ளது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்து, ரூ.1,02,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,675-க்கும், ஒரு சவரன் ரூ.85,400-க்கும் விற்பனையாகிறது.
தங்கத்தை தொடர்ந்து வெள்ளியின் விலையும் நகைப்பிரியர்களை மலைக்க வைக்கும் வகையில் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு அதிரடியாக ரூ.10 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.244-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.10,000 வரை உயர்ந்துள்ள நிலையில், ஒரு கிலோ வெள்ளி தற்போது ரூ.2,44,000 என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ளது.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

