தங்கம் விலை மீண்டும் உயர்வு.. வரலாற்று உச்சத்தை தொட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி..!
டிசம்பர் மாதம் தொடங்கியது முதலே ஆபரண தங்கத்தின் விலை பெரும் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த ஐந்து நாட்களாகத் தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருவது நடுத்தர வர்க்கத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் எளிய மக்களின் கைக்கு எட்டாத ஒரு பொருளாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது.
நேற்று ஒரு சவரன் தங்கம் 1,02,560 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. இன்றைய நிலவரப்படி, 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து 12,890 ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 1,03,120 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளியின் விலையும் ஒரே நாளில் கிராமுக்கு 9 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ 2,54,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தொடர் விலை உயர்வு திருமண விசேஷங்களுக்காக நகை வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

