இன்று ஒரே நாளில் 20,000 ரூபாய் அதிகரித்த வெள்ளி.. தங்கம் விலையும் வரலாற்று உச்சம்..!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்ந்து, புதிய வரலாற்று சாதனையைப் படைத்துள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் சர்வதேச அரசியல் சூழல்கள் காரணமாக, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளதே இந்த விலை உயர்வுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
இன்றைய நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.880 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,04,000 என்ற புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தூய தங்கமான 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.14,182 ஆகவும், 8 கிராம் ரூ.1,13,456 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியின் விலையும் இன்று ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.274 ஆகவும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,74,000 என்ற இமாலய விலையிலும் விற்பனையாகிறது.
தொடர்ச்சியாக உயர்ந்து வரும் இந்த விலை உயர்வு, இல்லத்தரசிகள் மற்றும் திருமணத்திற்காக தங்கம் வாங்க திட்டமிட்டிருப்பவர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், பாதுகாப்பான முதலீடாக கருதப்படுவதால், விலை உயர்வையும் மீறி சந்தையில் தேவை குறையவில்லை.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

