இன்று ஒரே நாளில் தங்கம் ரூ.3,360 குறைவு.. வெள்ளி விலை ரூ.23,000 சரிவு.. வியாபாரிகள் அதிர்ச்சி..!

2025-ஆம் ஆண்டின் இறுதி நாளில் சென்னை ஆபரண தங்க சந்தையில் அதிரடியான விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 

 

கடந்த சில வாரங்களாக சர்வதேச பொருளாதார சூழல் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு காரணமாக தங்கம் விலை விண்ணை தொட்ட நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் கணிசமாக குறைந்துள்ளன.

 

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.3,360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,00,800க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.420 சரிந்து ரூ.12,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது நகை வாங்குவோருக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது. 

 

வெள்ளி விலையிலும் வரலாறு காணாத சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.23 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.23,000 சரிந்து ரூ.2.58 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது. புத்தாண்டை முன்னிட்டு நகை வாங்க திட்டமிடுபவர்களுக்கு இந்த விலை வீழ்ச்சி ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. 

 

வரும் நாட்களில் சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்தே விலை மாற்றம் அமையும் என வணிக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

 

Edited by Mahendran

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.