தங்கம், வெள்ளி விலை மீண்டும் உச்சமா? குறைந்ததா? சென்னை நிலவரம்..!
புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில், தமிழகத்தில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை குறித்து தற்போது பார்ப்போம்.
இன்றைய சென்னை சந்தை நிலவரப்படி, 24 கேரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் ரூ. 13,690-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் எட்டு கிராம் விலை ரூ. 1,09,520-ஐ எட்டியுள்ளது. முதலீட்டாளர்கள் மத்தியில் 24 கேரட் தங்கத்திற்கான தேவை அதிகரித்துள்ளதே இந்த விலையேற்றத்திற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
ஆபரணத் தங்கமான 22 கேரட் ஒரு கிராம் ரூ. 12,550-க்கு விற்பனையாகிறது. இதன் எட்டு கிராம் விலை ரூ. 1,00,400 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வர்க்கத்தினர் அதிகம் வாங்கும் 22 கேரட் தங்கம், ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை தாண்டியிருப்பது திருமண வீட்டாருக்கு பெரும் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஒரு கிராம் வெள்ளி ரூ. 258.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ. 2,58,000.00 ஆக உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் ரூபாய் மதிப்பின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் வரும் நாட்களிலும் விலை உயர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
Edited by Siva
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

