பாகிஸ்தான் பீரங்கிகளை சிறைபிடித்து ஊர்வலமாக சென்ற ஆப்கன் வீரர்கள்: தலிபான் செய்தித் தொடர்பாளர் தகவல்

காபூல்: பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​களை ஆப்​கானிஸ்​தான் ராணுவம் சிறைபிடித்​த​தாக தலி​பான் செய்​தித்​தொடர்​பாளர் ஜபிஹுல்லா முஜாகித் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் சமூக வலை​தளத்​தில் வெளி​யிட்ட பதி​வில், “எல்​லைப் பகு​தி​களில் பாகிஸ்​தான் நடத்​திய துப்​பாக்​கிச் சூட்​டுக்கு ஆப்​கானிய படைகள் தகுந்த பதிலடி கொடுத்​தன. இதில், ஏராள​மான பாகிஸ்​தான் வீரர்​கள் கொல்​லப்​பட்​டனர். பாகிஸ்​தானுக்கு சொந்​த​மான ராணுவ டாங்​கி​கள் மற்​றும் ஆயுதங்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. பாகிஸ்​தானின் ராணுவ கட்​டமைப்​பு​களை ஆப்​கன் படைகள் அழித்​து​விட்​டன” என்று தெரி​வித்​துள்​ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.