சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்நிலை குழு ஆதரவு

பெய்ஜிங்: சீனா​வில் ஒரு கட்சி நிர்​வாக நடை​முறை உள்ளது. எதிர்க்​கட்​சிகள் கிடை​யாது. இதன்படி சீன கம்​யூனிஸ்ட் கட்​சியின் ஜி ஜின்​பிங் கடந்த 2013-ம் ஆண்​டில் அதிப​ராக பதவி​யேற்​றார். கடந்த 2023-ம் ஆண்​டில் அவர் 3-வது முறை அதிப​ராக தேர்வு செய்​யப்​பட்டு பதவி​யில் நீடிக்​கிறார்.

அவரது தலை​மைக்கு எதி​ராக சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மூத்த நிர்​வாகி​கள், மூத்த ராணுவ தளப​தி​கள் போர்க்​கொடி உயர்த்தி வரு​வ​தாக தகவல்​கள் வெளி​யாகி வரு​கின்​றன. இதன்​ காரண​மாக ஏராள​மான தலை​வர்​கள் மாய​மாகி இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது. குறிப்​பாக சீன கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் 3-வது மிகப்​பெரிய தலை​வ​ரான ஹீ வெய்​டோங்கை கடந்த மார்ச் மாதம் முதல் காண​வில்​லை.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.