ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்கும் பாலக் கீரை! அதிசய பலன்கள் தரும் எளிய சமையல் முறை
உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், தினமும் உணவில் ஒரு குறிப்பிட்ட கீரையை சேர்த்துக்கொள்வதன் மூலம் இரத்த உற்பத்தியை அதிகப்படுத்தலாம். அந்த அற்புதக் கீரை பாலக் கீரை ஆகும்.
பாலக் கீரை (Spinach) - 1 கட்டு
பூண்டு - 15 பல்
மிளகு (தூள்) - தேவையான அளவு
மஞ்சள் தூள் - சிறிதளவு
முதலில், பாலக் கீரையை நன்றாக சுத்தம் செய்துப் பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பூண்டுப் பற்களை எடுத்து ஒன்றிரண்டாக நசுக்கி கொள்ளவும்.
ஒரு இட்லிப் பாத்திரத்தில், பொடியாக நறுக்கிய பாலக் கீரை, நசுக்கிய பூண்டு, மிளகுத்தூள் மற்றும் மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து, நீராவியில் வேக வைக்கவும்.
நீராவியில் வெந்த பாலக் கீரை கலவையை ஒரு வாணலியில் போட்டு நன்கு கிளறவும்.
குறைவான ரத்த அளவு உள்ளவர்கள், மேற்கூறிய முறையில் நீராவியில் வேகவைத்த இந்த பாலக் கீரையை ஒரு நேர உணவாக தொடர்ந்து உட்கொண்டு வந்தால், ரத்த அணுக்களின் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்கும்.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

