பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்களை மீண்டும் மீண்டும் பயன்படுத்தலாமா? என்ன ஆபத்து?
நாம் குடிக்கும் தண்ணீரின் தூய்மைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, அதை சேமிக்கும் பாட்டில்களுக்கும் கொடுப்பது அவசியம். தண்ணீர் பாட்டில்களை முறையாக சுத்தம் செய்யாவிட்டால், அவை பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளின் புகலிடமாக மாறி வயிற்று வலி, தொண்டை தொற்று, ஆஸ்துமா போன்ற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
ஒவ்வொரு நாளும் வெதுவெதுப்பான சோப்பு நீரை கொண்டு பாட்டிலை கழுவ வேண்டும். வாய் வைத்து பருகுபவர்கள் பாட்டிலின் மூடி மற்றும் விளிம்பு பகுதியை அதிக கவனத்துடன் சுத்தப்படுத்த வேண்டும்.
வாரத்திற்கு ஒருமுறை பேக்கிங் சோடா அல்லது வினிகர் கரைசலை பயன்படுத்தி பாட்டிலின் உட்புறத்தை ஆழமாக சுத்தம் செய்வது கிருமிகளை முழுமையாக நீக்கும்.
சர்க்கரை கலந்த பழச்சாறுகள் அல்லது பால் பானங்களை பயன்படுத்திய பின் பாட்டிலை உடனே கழுவ வேண்டும். முதல் நாள் நிரப்பிய தண்ணீரை அடுத்த நாள் குடிக்கக் கூடாது.
முக்கியமாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பாட்டில்களை மீண்டும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். பாட்டிலின் உட்புறம் பழுப்பு அல்லது பச்சை நிற அழுக்குகள் படிந்திருந்தாலோ அல்லது துர்நாற்றம் வீசினாலோ அந்த பாட்டிலை உடனடியாக மாற்றுவது ஆரோக்கியத்திற்கு நல்லது.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
