காதில் அழுக்கு அதிகமானால் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது?
காதில் இயற்கையாகவே உருவாகும் மெழுகு போன்ற அழுக்கு வெளியிலிருந்து வரும் தூசு மற்றும் கிருமிகள் காதுக்குள் செல்லாமல் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அரணாகும். ஆனால், இது அளவுக்கு அதிகமாக சேரும்போது காது அடைப்பு, வலி அல்லது கேட்கும் திறன் குறைபாடு போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
செய்ய வேண்டியவை: காது அழுக்கு அதிகமாக இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின்படி பாதுகாப்பான இயர் டிராப்ஸ் பயன்படுத்தலாம். இது அழுக்கை மென்மையாக்கி தானாகவே வெளியே வர உதவும்.
குளித்த பிறகு காதின் வெளிப்புறத்தை மட்டும் மென்மையான துணியால் துடைக்க வேண்டும். காது மடல் மற்றும் காதின் பின் பகுதியை சுத்தமாக வைத்திருப்பது அவசியம். வலி அல்லது அடைப்பு நீடித்தால், உடனடியாக காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகி முறையாக சுத்தம் செய்துகொள்ள வேண்டும்.
செய்யக் கூடாதவை: காதை குடைய பட்ஸ் , ஹேர் பின், குச்சிகள் அல்லது தீக்குச்சிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. இவை அழுக்கை இன்னும் ஆழமாக தள்ளி காது ஜவ்வை கிழித்துவிடும் அபாயம் கொண்டது.
சுயமாக எந்த எண்ணெயையும் காதுக்குள் ஊற்றக்கூடாது. காது அழுக்கை அகற்ற கூர்மையான பொருட்களை பயன்படுத்துவது நிரந்தர செவிட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும்.
Edited by Mahendran
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

