பற்றி எரியும் நேபாளம் - புகைப்படங்கள்

நேபாளத்தில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் மற்றும் சமூக ஊடக தடை காரணமாக இந்தியா-நேபாள எல்லையில் பதற்றம்.
நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியதை அடுத்து, அங்கு வன்முறை வெடித்தது.
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்தும், ஊழல் நிர்வாகம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்னைகளை முன் வைத்து இளைஞர்கள் நேற்று போராட்டத்தில் குதித்தனர்.
போராட்டக்காரர்கள் பல்வேறு வாகனங்கள் மற்றும் பொருட்களுக்கு தீ வைப்பு.
வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட சம்பவங்களில் 19 பேர் உயிரிழப்பு.
நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளுக்கு முன்பு திரளாக குவிந்து அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காவல்துறையினர் தடியடி நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும், ரப்பர் குண்டுகளை வீசியும் போராட்டக்காரர்களை அடக்க முயன்றனர்.
போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தலைநகரில் ராணுவமும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து தலைநகரில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பு.
காத்மண்டுவில் பதற்றம் தொடர்வதால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.