ஜெருசலேமில் தீவிரவாத தாக்குதலில் 6 பேர் உயிரிழப்பு

ஜெருசலேம்: இஸ்​ரேலில் தீவிர​வா​தி​கள் நடத்​திய திடீர் தாக்​குதலில் 6 பேர் உயி​ரிழந்​தனர். இதுகுறித்து இஸ்​ரேல் காவல் துறை​யினர் நேற்று கூறிய​தாவது: கிழக்கு ஜெருசலேமில் யிகல் யாடின் தெரு​வில் உள்ள ரமோத்சந்​திப்​பில் இந்த சம்​பவம் நடை​பெற்​றுள்​ளது. பேருந்​தில் பயணம் செய்த, பேருந்​துக்கு காத்​திருந்த பயணி​கள் மீது காரில் வந்த பயங்​கர​வா​தி​கள் கண்​மூடித்​தன​மாக இந்த துப்​பாக்​கிச்​சூட்டை நடத்​தி​யுள்​ளனர். இதில், 6 பேர் உயி​ரிழந்​தனர். மேலும், 12 பேர் படு​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்​ளனர்.

முதல்​கட்ட தகவலின்​படி 2 தீவிர​வா​தி​கள் துப்​பாக்​கி​யுடன் வந்து இந்த தாக்​குதலில் ஈடு​பட்​டுள்​ளனர். இவர்​கள் பாலஸ்​தீனத்​தின் மேற்கு கரை பகு​தியை சேர்ந்​தவர்​கள். பாது​காப்பு படை​யினர் நடத்​திய எதிர்​ தாக்​குதலில் தீவிர​வா​தி​கள் சுட்​டுக்​கொல்​லப்​பட்​டனர். இவ்​வாறு காவல் துறை​யினர் தெரி​வித்​துள்​ளனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.