தங்கம் விலை மீண்டும் புதிய உச்சம்: பவுன் ரூ.80,480-க்கு விற்பனை

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை நேற்று மேலும் உயர்ந்​து, வரலாறு காணாத புதிய உச்​சத்தை தொட்​டது. பவுனுக்கு ரூ.440 உயர்ந்​து, ரூ.80,480-க்கு விற்​கப்​பட்​டது. தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால், குடும்ப நிகழ்ச்​சிகளுக்​காக நகை வாங்க எண்​ணி​யிருந்​தோர் கடும் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கம் விலை நிர்​ண​யிக்​கப்​படு​கிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்​தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.