தங்கம் விலை ரூ.81,000-ஐ தாண்டி புதிய உச்சம்: ஒரே நாளில் பவுனுக்கு ரூ.720 உயர்வு!

சென்னை: சென்​னை​யில் ஆபரணத் தங்​கத்​தின் விலை இன்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்​து, ரூ.81,200-க்கு விற்​கப்​படுகிறது. தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரு​வ​தால், குடும்ப நிகழ்ச்​சிகளுக்​காக நகை வாங்க எண்​ணி​யிருந்​தோர் கடும் அதிர்ச்சி அடைந்​துள்​ளனர்.

சர்​வ​தேச பொருளா​தார சூழல், அமெரிக்க டாலருக்கு நிக​ரான இந்​திய ரூபா​யின் மதிப்பு ஆகிய​வற்​றின் அடிப்​படை​யில் தங்​கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த மாதம் 26-ம் தேதி முதல், தங்​கம் விலை தொடர்ந்து உயர்ந்து வந்​தது. குறிப்​பாக, அமெரிக்​கா​வில் இறக்​குமதி செய்​யப்​படும் இந்​திய பொருட்​களுக்கு 50 சதவீதம் வரி விதிப்​பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்​திய ரூபாய் மதிப்பு சரிவு உள்​ளிட்ட காரணங்​களால் தங்​கம் விலை மேலும் உயர்ந்​து, நாள்​தோறும் வரலாறு காணாத புதிய உச்​சத்தை பதிவு செய்​தது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.