திருமலை ஏழுமலையான் வருடாந்திர பிரம்மோற்சவ அட்டவணை வெளியீடு

திருப்பதி: திருமலை ஏழுமலையானுக்கு நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின்போது நடைபெறும் வாகன சேவை பட்டியலை தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலையில் வருடாந்திர பிரம்மோற்சவம் வரும் செப்டம்பா் 24-ஆம் தேதி முதல் அக். 2-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த உற்சவம் செப்டம்பா் 23-ஆம் தேதி அங்குராா்பணத்துடன் தொடங்க உள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 7 மணி முதல் 9 மணி வரையிலும் (செப்டம்பா் 24-ஆம் தேதி தவிர) வாகன சேவைகள் நடைபெறும். காலை மற்றும் மாலை வாகன சேவைகளின் நாள் வாரியான அட்டவணை பின்வருமாறு:

24-09-2025 (புதன்கிழமை) மாலை 5.45 மணி முதல் 6 மணி வரை கொடியேற்றம்.

இரவு 9 மணி முதல் 11 மணி வரை: பெரிய சேஷ வாகனம்

25-09-2025 (வியாழக்கிழமை) 8 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனம்.

மதியம் 1 மணி முதல் 3 மணி வரை: ஸ்நபன திருமஞ்சனம், இரவு 7 மணி முதல் 9 மணி வரை அன்னப் பறவை வாகனம்.

26-08- 2025 (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை சிம்ம வாகனம்,

பிற்பகல் 1 மணி முதல் மாலை 3 மணி வரை ஸ்நபனம். மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முத்து பந்தல் வாகனம்.

27-10-2025 (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை கல்பவிருட்சம். மதியம் 1 மணி முதல் 3 மணி வரை ஸ்நபனம்.மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை சா்வ பூபாலம்.

28-09-2025 (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை மோகினி அவதாரம். மாலை 6.30 மணி முதல் 11.30 மணி வரை கருட வாகனம்.

29-09-2025 (திங்கள்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை அனுமந்த வாகனம், மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை தங்க ரதம். மாலை 7 மணி முதல் 9 வரை கஜ வாகனம்.

30-09-2025 (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணி வரை சூரியபிரபை, இரவு 7 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை.

1-10-2025 (புதன்கிழமை) காலை 7 மணிக்கு திருத்தோ் புறப்பாடு, மாலை 7 மணி முதல் 9 மணி வரை குதிரை வாகனம்.

2-10-2025 (வியாழக்கிழமை) காலை 6 மணி முதல் 9 மணி வரை தீா்த்தவாரி, இரவு 8.30 மணி முதல் இரவு 10.30 மணி வரை கொடியிறக்கம் நடைபெறுகிறது.

வருடந்தோறும் பிரம்மோற்சவத்தின் போது ரங்கநாயகா் மண்டபத்தில் உள்ள ஸ்ரீ மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி மற்றும் பூதேவி உற்சவ தெய்வங்களுக்கு ஸ்நபன திருமஞ்சனம் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காம் நாள்களில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.