100 ஆண்டுகள் வரை வாழக்கூடிய அரிய கிளி இனம் பற்றி தெரியுமா? - காகாபோவின் வாழ்வியல் இதுதான்!
”சங்கு கிளி” என்று பிரபலமாக அறியப்படும் நியூசிலாந்தை பூர்வீகமாக கொண்ட பறக்க முடியாத பறவை இனம் தான் காகாபோ. உலகின் தனித்துவமான அரிதான பறவை இனங்களில் ஒன்றாக இது கருதப்படுகிறது.
இதன் முகம் ஆந்தை போல் இருந்தாலும் இறகுகளின் பச்சை நிறம், கிளியை போன்று தோற்றமளிக்கிறது. இந்த பறவையினம் 90 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட அசாதாரண ஆயுட்காலத்தை கொண்டுள்ளது தான் இதன் தனித்துவத்திற்கு காரணமாக உள்ளது.
அவை காடுகளில் 58–90 ஆண்டுகள் வாழக்கூடியவை என்றும், மனிதர்களால் சிறைபிடிக்கப்பட்டாலோ அல்லது பாதுகாக்கப்பட்ட சூழல்களிலோ 100 ஆண்டுகள் வரை வாழக்கூடும் என்றும் டைம்ஸ் ஆஃப் இந்தியா வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
காகாபோவின் நீண்ட ஆயுள் குறித்த ஆய்வுகள், பறவைகளின் வயதான தன்மையைப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகளுக்கு உதவுகின்றன.
இரவில் முழித்திருக்கும் பண்புகளை கொண்ட இதனை ”இரவு கிளி” என்று அழைக்கின்றனர். இரவு நேர நடத்தை மற்றும் இருட்டிய பின்பு இது செயல்படுவதற்கு விருப்பப்படுவதாக இதனை இவ்வாறு அழைக்கின்றனர்.
இரவு நேர பழக்கம், தனித்துவமான உருவியல் ஆகியவற்றின் கலவையே இது உலகின் மிகவும் அசாதாரணமான கவர்ச்சியான கிளிகளில் ஒன்றாக பறவை ஆர்வலர்களை ஈர்க்கிறது. இது நியூசிலாந்தை பூர்வீகமாக கொண்ட தாவரங்களை விரும்பி உண்ணுகிறது. அதில் விதைகள், இலைகள், பழங்கள் ஆகியவை அடங்கும்.
காகாபோ, தாங்கள் உட்கொள்ளும் பழங்களிலிருந்து விதைகளைப் பிரித்தெடுப்பதன் மூலம் காடுகளுக்கு பங்களிக்கிறது. குறிப்பாக ரிமு மற்றும் பிற பூர்வீக மரங்களை பராமரிக்க உதவுகின்றன.
அவற்றின் விதை பரவல் இயற்கையான வன தொடர்ச்சியை ஊக்குவிக்கிறது. சிறிய வனவிலங்குகளுக்கு வாழ்விடத்தை ஆதரிக்கிறது மற்றும் சுற்றுச்சூழல் சமநிலையை பராமரிக்க உதவுகிறது.
இரவில் உணவு உண்பது பகலில் ஓய்வு எடுப்பதும் இதன் தனித்துவமான பண்புகளாக உள்ளன. இதன் ஒவ்வொரு இனப்பெருக்க முறை இரண்டு முதல் நான்கு வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே நிகழ்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


