ஜப்பான்: மிரட்டுவதற்கு ஆட்களை பணி அமர்த்தி பணம் சம்பாதிக்கும் நிறுவனம்- கட்டணம் எவ்வளவு தெரியுமா?
ஜப்பானில் Rental Kowaihito என்ற நிறுவனம், பிரச்னைகளை தீர்ப்பதற்காகவே "மிரட்டும் நபர்கள்" (Scary Person) என்று வேலையில் பணி அமர்த்தி வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான சேவையை வழங்கி வருவதாக சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது.
அதாவது இவர்கள் ”பயமுறுத்தும் நபர்கள்” (Scary Person) என்று குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களின் வேலை ஏதேனும் ஒரு பிரச்னை ஏற்பட்டால் அவர்களுக்கு பஞ்சாயத்து செய்வதற்காக இவர்கள் அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.
இது போன்ற சேவையை வழங்குவதற்காக அந்த நிறுவனம் இந்த நபர்களை பணி அமர்த்தி அதற்கான கட்டணமும் வசூலித்து வருகிறது.
இப்படி பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள வாடிக்கையாளர்களுடன் செல்பவர்கள் பெரும்பாலும் அந்த பிரச்னைகளை 30 நிமிடங்களுக்குள் தீர்த்து விடுவதாகவும் கூறப்படுகிறது.
சக ஊழியர்களை எதிர்கொண்டு பழிவாங்கவோ அல்லது அலுவலக மோதல்களை தீர்த்து வைக்கவோ இந்த சேவை வழங்கும் நபர்கள் உதவுகின்றனர்.
இது தவிர வாடிக்கையாளர்கள் தங்களது காதலர்கள் அல்லது துரோகம் செய்துவிட்டு சென்றவர்களுக்கு எதிராக பிரச்னைகளை தீர்க்கவும் முன்னாள் முதலாளிகள் வணிக கூட்டாளிகளிடம் இருந்து கடனை வசூலிக்கவும் இந்த ”பயமுறுத்தும் நபர்களை” அழைத்துச் செல்கிறார்கள்.
சுருக்கமாக சொல்லப்போனால் நமது ஊர்களில் கட்டப்பஞ்சாயத்து செய்வது போல், அங்கேயும் நடக்கிறது ஆனால் அங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டு, இவர்களிடம் உதவியை நாடி வாடிக்கையாளர்கள் ”பயமுறுத்தும் நபர்களை” அழைத்துச் சென்று அந்த பிரச்னைகளை முடித்துக் கொண்டு கட்டணமும் செலுத்துகிறார்கள். இந்த வித்தியாசமான சேவை வழங்குவதன் மூலம் அந்த நிறுவனம் பெரும் கவனம் ஈர்த்து வருகிறது.
ஒவ்வொரு முப்பது நிமிட சேவைக்கும் நிறுவனம் 20,000 ஜப்பானிய யென் (ரூ.12,339) வசூலிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் முயற்சியே ‘My Vikatan’. இந்த ‘My Vikatan’ பிரிவில் பதிவாகும் கட்டுரைகளுக்கு என பிரத்யேகமான ஒரு வாட்ஸ்அப் கம்யூனிட்டி க்ரூப் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் இணைந்திருப்பதன் மூலம், ‘My Vikatan’கட்டுரைகள், ‘My Vikatan’ தொடர்பான அறிவிப்புகள் என அனைத்தையும் உடனே தெரிந்து கொள்ளலாம்..! இதில் இணைய கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்யுங்க மக்களே...!
Link : https://chat.whatsapp.com/G7U0Xo0F63YA5PC6VgYMBQ
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


