`StartUp சாகசம் 39: Excavators பெரிதாகத்தான் இருக்க வேண்டுமா? - மாற்று யோசனையில் சாதித்த Tomgo

சமீபகாலமாக, இந்தியாவின் கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்புத் திட்டங்கள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய திட்டங்களில், மினி அகழ்வாராய்ச்சி இயந்திரங்களின் தேவை அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தமிழ்நாட்டில் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளில் இந்த இயந்திரங்களுக்குப் பெரும் வரவேற்பு உருவாகியுள்ளது.

இந்த வாய்ப்பை ஒரு வணிகமாக மாற்றியமைத்து, ஒரு புத்தாக்க நிறுவனம் எப்படிச் செயல்படுகிறது என்பதை இந்த வாரம் நாம் காணவிருக்கிறோம்.

ஜேசிபி

வளரும் நாடுகளில் கட்டமைப்பு மேம்பாடு எப்போதும் அதிகமாக இருக்கும். இதில் பெரும்பாலானவை நகரங்களில் மெட்ரோ ரயில் அமைத்தல், சுரங்கம் மற்றும் குவாரிகளைச் சீரமைத்தல், கழிவு மேலாண்மை போன்ற பணிகளாகும்.

அதுவே கிராமங்களில், சாலை அமைத்தல், நீர் மேலாண்மை, ஆறு மேம்பாடு போன்ற விவசாயம் சார்ந்த பணிகளும் இருந்துகொண்டே இருக்கும்.

இதற்காக, பெரும்பாலும் ஜேசிபி இயந்திரங்களின் பயன்பாடு மிக அதிகமாகத் தேவைப்படுகிறது.

ஆனால், அதிக முதலீடு மற்றும் பெருகிவரும் போட்டி காரணமாக, Excavators சார்ந்த தொழில்களில் லாபம் ஈட்டுவது கடினமாகி வருகிறது.

சாதாரணப் பார்வைக்கு இவற்றை நாம் படித்துக் கடந்துவிடுகிறோம். ஆனால் ஒரு தொழில்முனைவோருக்கு, இத்தகைய சிக்கல்களே வாய்ப்புகளாக அமைகின்றன.

பெரிய மேலாண்மைப் பணிகளுக்கு ஜேசிபி போன்ற Excavators இயந்திரங்கள் தேவை என்றாலும், எல்லா இடங்களிலும் அதன் பயன்பாடும், செலவும் அதிகம்.

ஆகவே, Mini Excavators நிறைய தேவை இருக்கிறது என்பதை ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் கண்டறிந்துள்ளது.

தமிழ்நாட்டில், பெரிய இயந்திரங்களுக்குப் பதிலாகச் சிறிய இயந்திரங்களை உருவாக்கி, அவற்றைச் சிறப்பான முறையில் மேம்படுத்தி வருகிறது.

டாம்கோ அக்ரோ மெசின்ஸ்
டாம்கோ அக்ரோ மெசின்ஸ்

இந்தத் துறையில் ஆபரேட்டராகத் தொடங்கி, பின்னர் உதிரி பாகங்கள் விற்கும் நிறுவனமாக மாறி, அதன் பின் சிறிய இயந்திரங்களை உருவாக்கியும், பல்வேறு பிரச்னைகளுக்குத் தீர்வாக இயந்திரங்களை வடிவமைத்தும், தற்போது பெரிய நிறுவனங்களுக்காக ரோபோட்களையும் உருவாக்கி வரும் டாம்கோ அக்ரோ மெசின்ஸ் (Tomgo Agro Machines) என்ற நிறுவனத்தின் சாகசக் கதையை அதன் நிறுவனர்களான தாமஸ் மற்றும் ரோணிக்கா மேரி அவர்களிடம் கேட்போம்.

``உங்கள் நிறுவனம் விவசாயம் மற்றும் கட்டுமானத் துறைகளுக்கு மலிவான, புத்திசாலித்தனமான மற்றும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய இயந்திரங்களை வடிவமைப்பதன் முக்கிய நோக்கம் என்ன?"

``என் கணவர் தாமஸ் 5 வருடங்கள் ஜேசிபி (JCB) ஆபரேட்டராகப் பணியாற்றினார். அதன் பிறகு, சொந்தமாக ஜேசிபி உதிரிபாகங்களை விற்கும் நிறுவனத்தை ஆரம்பித்தார். அப்போது உதிரிபாகங்கள் வாங்க நிறைய பேர் வந்து போனதனால், அந்தத் தொழிலின் தேவை (demand) தெரியவந்தது.

பழைய Excavators வைத்திருப்பவர்களும் எங்களைத் தேடி வந்து கொடுத்தனர். அது எங்களுக்கு ஒரு தொழிலாகவே மாறிப்போனது. நல்ல உதிரிபாகங்களை விற்பனை செய்துவிட்டு, தேவையில்லாத இரும்புகளை எடைக்கு போட்டு விடுவேன்.

டாம்கோ அக்ரோ மெசின்ஸ்
டாம்கோ அக்ரோ மெசின்ஸ்

இவ்வாறு செய்து கொண்டிருந்தபோது, நிறைய பேர் நல்ல முறையில் ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தைக்கூட எங்களிடம் விற்பனை செய்ய முன்வந்தனர்.

"ஏன் இவ்வாறு என்னிடம் கொடுக்கிறீர்கள்?" என்று கேட்கும்போது, அவர்கள், "எனக்கு என் தொழிலுக்கு ஆட்கள் இல்லாத சூழ்நிலையில் இதை வாங்கிப் பயன்படுத்தலாம் என்று வாங்கினேன். ஆனால், யானையைக் கட்டித் தீனி போடுவதுபோல் என்னால் அதைச் சமாளிக்க முடியவில்லை. விற்கவும் முடியவில்லை," என்று கூறினார்கள்.

அதனால், இதில் உள்ள பிரச்னையைப் புரிந்துகொண்டு, நாம் இதற்கு ஒரு தீர்வளித்தால் என்ன என்று யோசித்தேன். மாற்றம் ஒன்றே மாறாதது அந்த மாற்றத்தை நமக்கானதாக எவ்வாறு மாற்றிக்கொள்ள வேண்டும் என்று முடிவு செய்தேன்.

அப்போதுதான், பெரிய Excavator-களுக்குப் பதிலாக சிறிய அளவில் இயந்திரங்களைத் தயார் செய்யலாம் என்று தோன்றியது, ஏனெனில் பெரிய இயந்திரங்கள் செலவு மிக்கது, அதே சமயம் அது ஓடாமல் நின்றுவிட்டால் அதன் ஓனருக்கு செலவும் அதிகம்.

இதற்கு மாற்றாக ஏன் சிறிய இயந்திரங்களை உருவாக்கக்கூடாது என்று ஆரம்பித்து, ஒரு சிறிய இயந்திரத்தையும் தயார் செய்தேன்.

டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனம் ஆரம்ப காலத்தில் சிறிய இயந்திரங்களை உருவாக்குவதன் மூலம் இந்தத் துறையில் காலடி பதித்தது.

டாம்கோ அக்ரோ மெசின்ஸ்
டாம்கோ அக்ரோ மெசின்ஸ்

இதன் மூலம் முதல் ஆண்டில் நாங்கள் பெரிய அளவில் வருமானம் (revenue) எடுக்கவில்லை; மாறாக ₹8,000 நஷ்டத்தில் இருந்தோம்.

அடுத்தடுத்த தொடர்ந்த முயற்சிகளும், இயந்திரங்களில் அடுத்தடுத்த புதுப்பித்தல்களும் (updates) மூலமாக, இன்று மினி எக்ஸ்கவேட்டர் (Mini Excavator) என்ற இயந்திரம் வரை முழுமையாக்கி ஒரு முழுமையான மினி எக்ஸ்கவேட்டர் இயந்திரத்தை உருவாக்கியுள்ளோம். ஏற்றுமதி செய்யும் அளவிற்கு உயர்ந்துள்ளோம்.

இன்று இந்த நான்கு வருடங்களில் மொத்த விற்பனையில் ₹4 கோடியைத் தாண்டி உள்ளோம்.

ஜான்யுடெக் (Johnyutech), பாப்கேட் (Bobcat), மற்றும் கோல்ட் மைன்ஸ் (Gold Mines) போன்ற பெரிய நிறுவனங்களுடன் சேர்ந்து பல்வேறு ரோபோக்களையும், அதை உருவாக்கும் இயந்திரங்களையும் உருவாக்கி வருகிறோம்.

``உங்கள் நிறுவனத்தின் இயந்திரங்கள் என்னென்ன துறைகளில் பயன்படுகின்றன? நீங்கள் தயாரிக்கும் இயந்திரங்களின் சிறப்பம்சங்கள் என்ன?”

``எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பான டாம்கோ அக்ரோ மெசின்ஸ் ரோவர் மற்றும் Standard Model Backhol மாடல்கள் நிறைய வேலைகளுக்குப் பயன்படுகின்றன.

அவை விவசாயத்துறை, கட்டிடத்துறை, சுரங்கத் துறை, ரோபோட்டிக் மற்றும் உப்பளங்கள், சிறிய தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படுகின்றன.

இத்துறைகளில் உள்ளவர்கள் அனைவரும் அவர்களுக்கான வேலைக்கு பெரிய ஜேசிபி வாங்குவது ரூ. 35 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கும்.

ஆனால், நம்மளுடைய இயந்திரம் பட்ஜெட்டுக்கு ஏற்றவாறு (budget-friendly) ரூ. 2 லட்சத்திலிருந்து ஆரம்பிப்பதால், அவர்கள் ஒரு நாளைக்கு ஒரு எட்டு பேரின் சம்பளத்தைக் குறைத்தாலும் ரூ. 4,000 மிச்சம். அதன்படி பார்த்தால், மாதத்திற்கு ரூ. 1.5 லட்சம் வரை அவர்களால் சேமிக்க முடிகிறது.

டாம்கோ அக்ரோ மெசின்ஸ்
டாம்கோ அக்ரோ மெசின்ஸ்

நம்மளுடைய இயந்திரத்தின் சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், ஒரு டன் எடைதான் இருக்கும். ஒரு மூன்று அடி அகலத்திலேயே வந்து போய்க்க முடியும்.

இதே பெரிய இயந்திரங்கள் துறையில் இருப்பதைப் பார்த்தால், ஏழரை அடி அகலம், ஏழு டன் எடை இருக்கும். ஆயிரம் இணைப்பு கருவிகள் இருந்தால் தான் அது ஒரு இயந்திரம் என்று சொல்வார்கள்.

ஆனால், நம்மளுடைய இயந்திரம் ஒரு 150 பொருள்கள் இருந்தாலே போதும். நமது இயந்திரம் 1.10 டன் எடை என்பதால், சின்ன இடங்களிலும் சென்று வருவதற்கு எளிதாக இருக்கும்.

அதோடு, கிணற்றுக்குள் எளிதாக இறங்கி குழி தோண்டும். எல்லா வேலைகளுக்கும் இது சிறப்பான விதத்தில் பயன்படும்.

``பெரிய இயந்திரங்கள் செய்யும் அனைத்து வேலைகளையும் உங்கள் சிறிய இயந்திரங்கள் எவ்வாறு செய்கின்றன? இதை நீங்கள் எப்படி உறுதி செய்கிறீர்கள்?”

``எங்களுடைய இயந்திரங்கள் வடிவத்தில் சிறியதாக இருந்தாலும், பெரிய இயந்திரங்கள் செய்யக்கூடிய டிராக்டர் ஏற்றுதல் (tractor loading), இரண்டு யூனிட் டிப்பர் ஏற்றுதல் (tipper loading), 5 அடி ஆழமுள்ள குழி தோண்டுதல், பைப்லைன் அமைத்தல், மரம், செடி, கொடிகளைப் பிடுங்குதல், சொட்டுநீர் பாசனம் அமைக்க, கிணற்றுக்குள் இறங்கி கிணறு வெட்ட என்று பெரிய இயந்திரங்களால் செய்ய முடியாத வேலைகளைக்கூட நம்முடைய இயந்திரம் செய்ய முடியும்.

டாம்கோ அக்ரோ மெசின்ஸ்
டாம்கோ அக்ரோ மெசின்ஸ்

``உங்கள் நிறுவனம் உருவாக்கிய இயந்திரங்களால் விவசாயிகளுக்கு ஏற்பட்ட நன்மைகள் என்னென்ன?”

``எங்களுடைய இயந்திரங்களை விவசாயிகள் பயன்படுத்துவதால், விவசாயிகளுக்கு அதிக ஆட்களை வைத்து வேலை செய்யும் கூலி மிச்சமாகிறது. உடல் உழைப்பு மிச்சமாகிறது.

மேலும், விரைவாக அந்தக் கால சூழ்நிலைகளுக்குள்ளேயே வேலையை முடிக்க முடிகிறது. இதனால், அந்தந்த தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பயிர் செய்யக்கூடிய நிலைமை விவசாயிகளுக்குச் சுலபமாக அமைகிறது.

தினமும் வேலையாட்கள் வருகிறார்களா அல்லது வரமாட்டார்களா என்று கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. இதனால், உற்பத்தியும் அவர்களுக்கு அதிகமாகிறது; வருமானம் இரட்டிப்பாகிறது.

அவர்களுடைய வேலைகள் முடிந்த பின்பு, மற்ற தோட்டங்களுக்கும் அவர் வாடகைக்குச் சென்று வருமானம் ஈட்டும் பணியையும் இதன் மூலம் செய்யலாம்.

``இயந்திரங்கள் என்றாலே, விற்பனைக்கு பிந்தைய சேவைதான் (after-sales service) மிக முக்கியமானது. அதை நீங்கள் எவ்வாறு உறுதி செய்கிறீர்கள்?”

``நாங்கள் இயந்திரங்களை உற்பத்தி செய்கிறோம். ஆனால், எங்களிடம் போதுமான டீலர் (dealer) அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் (distributor) தற்போது இல்லை.

எங்களை நம்பி வருகிறவர்கள் எல்லோரும் ஏற்கனவே வாங்கியவர்களின் பரிந்துரையின்படியே வருகிறார்கள். ஏனெனில், நாம் இயந்திரத்தைத் தயாரிப்பது முக்கியமல்ல.

நாம் வாடிக்கையாளரிடம் அவர் என்ன நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டு, அவருக்குத் தேவையானபடி இயந்திரத்தைத் தயாரித்துக் கொடுத்து, அவருக்கு அடுத்தபடியாகச் சேவை (service) கொடுத்து, அவரிடம் நெருக்கமாக உள்ளதாலேயே அடுத்தடுத்த ஆர்டர்கள் (orders) எங்களுக்கு வருகின்றன.

அதனால், தற்போது வரை வாடிக்கையாளர்களிடம் நேரடியான தொடர்பு வைத்துள்ளோம்.

டாம்கோ அக்ரோ மெசின்ஸ்
டாம்கோ அக்ரோ மெசின்ஸ்

சேவைக்காகவே தனியாக ஒரு குழுவை (team) அமைத்துள்ளோம். சேவை சம்பந்தப்பட்ட தகவல்கள் வாடிக்கையாளரிடம் இருந்து வரும்போது, அதை சேவை குழு வந்து கவனித்து, உதாரணத்திற்கு, 7200001901-ல் இருந்து 7200001905 என்று முடியும் அந்த எண்ணிற்கு வாடிக்கையாளர் அழைப்பு (call) செய்து தகவலைத் தெரிவிப்பார்.

உடனே, அந்தக் குழு அதைக் கவனித்து, சரியான விதத்தில் பயன்படுத்தி, சேவை தந்து கொண்டு போவதால், மிகவும் நல்ல முறையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து எங்களுக்கு நேர்மறையான கருத்துக்கள் (review) கிடைத்துள்ளன.

``இயந்திரங்களைத் தயாரிக்க பெரிய இடமும் முதலீடும் தேவை. உங்கள் ஆரம்பகால முதலீட்டை எவ்வாறு திரட்டினீர்கள்? உங்களுக்கு அரசின் ஆதரவு கிடைத்ததா?”

``இயந்திரங்களைத் தயாரிக்க பெரிய இடம் தேவைதான். ஆனால், நாங்கள் எங்களது பிறந்த ஊரிலேயே, சொந்த கிராமத்திலேயே குட்டத்துப்பட்டி, திண்டுக்கல்லிலேயே தொடங்கினோம்.

இது திண்டுக்கல்லில் இருந்து 17 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எங்களது சொந்த இடத்தில் தொடங்கியதால், திண்டுக்கல் நகரத்திற்கு (city) வருவதற்குக்கூட 17 கிலோமீட்டர் ஆகும்.

எங்களுடைய சொந்த இடத்தையே முதலீடாகக் கருதி, அந்த இடத்திலேயே நிறுவனத்தைத் தொடங்கினோம். இன்று வரை அதே இடத்தில் இருக்கிறது.

இந்த கிராமத்தில் இருந்தே எங்களால் 300 இயந்திரங்களை 15 மாநிலங்களில் இருந்து 35 மாவட்டங்கள் வரை சென்றடைய முடிந்திருக்கிறது. நாங்கள் ஒரு ஸ்டார்ட்அப் (Startup) என்பதால் நிறைய விஷயங்கள் தெரியாமல் இருந்தது.

டாம்கோ அக்ரோ மெசின்ஸ்
டாம்கோ அக்ரோ மெசின்ஸ்

ஆரம்ப காலத்தில் நாங்கள் கணவன் - மனைவி இருவரும் எந்தவித அனுபவமும் இல்லாமல், எங்களது சொந்த முதலீட்டை மட்டுமே நம்பித் தொடங்கியதால், நிறைய அரசு பற்றிய திட்டங்கள் எங்களுக்குத் தெரியாமல் இருந்தது.

எனவே, எங்களுடைய முதலீட்டையே பெரிய முதலீடாகக் கருதி, உறவினர்கள், குடும்ப நண்பர்களிடம் கடன் வாங்கி ஆரம்ப காலத்தில் செய்தோம்.

நிறுவனம் தொடங்கி இரண்டு வருடங்களில், ஸ்டார்ட்அப் இந்தியா (Startup India), Forge, ஸ்டார்ட்அப் டி.என் (Startup TN) ஆகியவற்றின் உதவியால் நிறைய திட்டங்கள் பற்றி அறிய முடிந்தது.

அவற்றில் ஒன்றான சிப்காட் (SIPCOT) திட்டத்தில் விண்ணப்பித்து, அதில் ரூ. 20 லட்சம் மானியம் (grant amount) Forge வழியே கிடைத்தது. அதன் மூலம் மினி எக்ஸ் கிரைண்டர் (Mini Ex Grinder) என்ற இயந்திரத்தை உருவாக்கினோம்.

``உங்கள் இயந்திரங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த முதலீடு என்று நீங்கள் ஏன் கருதுகிறீர்கள்? குறிப்பாக, 30% வரை எரிபொருள் சேமிப்பு மற்றும் குறைந்த பராமரிப்புச் செலவுகள் குறித்து விளக்க முடியுமா?”

``நடைமுறையில் உள்ள மற்ற இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஏழு லிட்டர் வரை டீசல் பயன்படுத்தும். எங்களது டாம்கோ அக்ரோ மெசின்ஸ் நிறுவனத்தில் உள்ள இயந்திரங்கள் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லிட்டர் மட்டுமே பயன்படுத்தும்.

இதன் மூலமாக எரிபொருள் சேமிப்பு நல்ல முறையில் நடக்கிறது. &

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.