’விண்வெளியில் இருக்கேன் ஆக்சிஜன் வாங்க பணம் வேண்டும்..’ 80 வயது மூதாட்டியிடம் மோசடி- எப்படி நடந்தது?
ஜப்பானைச் சேர்ந்த 80 வயதான முதியோர் ஒருவர், விண்வெளி வீரர் என நடித்து மோசடியில் ஈடுபட்டவரிடம் 6 லட்சம் ரூபாயை (5,000 பவுன்ஸ்) இழந்துள்ளார்.
தனியாக வசித்து வந்த 80 வயது பெண்மணி, சமூக ஊடகம் மூலம் ஒரு நபரை சந்தித்து இருக்கிறார். அவர் தன்னை விண்வெளி வீரர் என்று அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதன் பின்னர் இருவரும் பேசி பழகி உள்ளனர்.
சிறிது நாட்கள் கழித்து அந்த நபர் தான் விண்வெளியில் இருக்கிறேன், தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளேன், ஆக்சிஜன் வாங்குவதற்கு பணம் அனுப்புமாறு அந்த மூதாட்டி வற்புறுத்தி இருக்கிறார். இதை நம்பி அந்த பெண்மணி, 5.5 லட்சம் ரூபாயை அனுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து காவல்துறையினர் கூறுகையில் ”இந்தப் பெண்மணி சமூக ஊடகத்தின் மூலம் பழகிய நபரை நம்பி இவ்வளவு பெரிய தொகையை அனுப்பி இருக்கிறார்.
சமூக ஊடகத்தில் நீங்கள் சந்திக்கும் ஒருவர் பணம் கேட்டால் அது மோசடியாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டாலே உடனடியாக காவல்துறைக்கு புகார் செய்யுங்கள்” என்று கூறுகின்றனர்.
ஜப்பானில் இது போன்று முதியோர்களை குறி வைத்து மோசடி சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது. உறவினர்கள் போல் நடித்து பணம் கேட்பது, ஏடிஎம் மூலம் பணத்தை திரும்ப பெறுவதாக கூறி மோசடி செய்வது போன்ற பல்வேறு மோசடி சம்பவங்கள் இதில் நடப்பதாகவும் இதனால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி காவல் துறையினர் எச்சரித்து வருகின்றனர்
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

