காருக்குள் ஒரு மணி நேரம் ரகசிய ஆலோசனை: பிரதமர் மோடியுடன் பேசியது பற்றி  ரஷ்ய அதிபர் புதின் விளக்கம்

பெய்ஜிங்: சீனா​வின் தியான்​ஜின் நகரில் அண்​மை​யில் ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாடு நடை​பெற்​றது.

இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்​திய பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​றனர். கடந்த 1-ம் தேதி எஸ்​சிஓ உச்சி மாநாடு நிறைவடைந்த பிறகு அதிபர் புதின் தனது சிறப்பு காரில் ஹோட்​டலுக்கு புறப்​பட்​டார். அப்​போது பிரதமர் நரேந்​திர மோடியை​யும் அவர் தனது காரில் அழைத்​துச் சென்​றார். இரு தலை​வர்​களும் ஹோட்​டலுக்கு சென்ற பிறகும் காரில் இருந்து இறங்​க​வில்​லை. சுமார் ஒரு மணி நேரம் அதிபர் புதினும் பிரதமர் மோடி​யும் காரில் ரகசிய ஆலோ​சனை நடத்​தினர். இந்த பேச்​சு​வார்த்தை உலக நாடு​களின் கவனத்தை ஈர்த்து உள்​ளன.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.