தெருநாய்கள் விவகாரம்: மனிதர்களுக்குச் செய்வதைப் போல நாய்களுக்குச் செய்யாமல் போனதால் - மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் வேலூரில் இன்று (செப்டம்பர் 4) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அப்போது அவரிடம், சினிமா துறையிலிருந்தே தவெக தலைவர் விஜய்க்கு எதிர்ப்புகள் கிளம்புகின்றனவே இதை எப்படிப் பார்க்கிறீர்கள். 2026-ல் அவருடைய அரசியல் எவ்விதத் தாக்கத்தை ஏற்படுத்தும்? என்று கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது.

அதற்குப் பதிலளித்த மிஷ்கின், "நான் ஒரு சுத்தமான சினிமாக்காரன். அரசியலைப் பற்றி நான் எதுவும் கூறியதில்லை.

தவெக தலைவர் விஜய்

தம்பி விஜய் தற்போது அரசியல் கட்சித் தலைவராகிவிட்டார். என்னைப் பொறுத்தவரை அவர் கடுமையான உழைப்பாளி. ரொம்ப நல்ல மனுஷன்.

அவரது அரசியல் பயணம் குறித்து நான் எதுவும் சொல்லமாட்டேன். அரசியலாக இதை முலாம் பூச வேண்டாம்" என்று கூறியிருக்கிறார்.

தொடர்ந்து தெரு நாய்கள் விவகாரம் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், "மனிதர்களுக்குக் கருத்தடை செய்வதைப் போல நாய்களுக்குச் செய்யாமல் போனதால் அது பெருகிவிட்டது.

தெரு நாய்
தெரு நாய்

உயிர் வதை கொடுமையானது. அதே நேரத்தில் நாய்களால் வரும் பாதிப்புகளைத் தடுக்கவும் வேண்டும். இந்த விஷயத்தில் இரண்டு பக்கங்களையும் பார்க்க வேண்டும்" என்று தெரிவித்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.