குமார சம்பவம்: நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என அப்பா சொன்னார் - ஹீரோவாக அறிமுகமாகும் குமரன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சித் தொடர் மூலம் ரசிகர்களிடம் கவனம் பெற்ற நடிகர் குமரன் தங்கராஜன்.
தற்போது ‘குமார சம்பவம்’ படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் குமரன் தங்கராஜனுடன் பாயல் ராதாகிருஷ்ணா, ஜி.எம். குமார், குமரவேல், பால சரவணன், வினோத் சாகர், லிவிங்ஸ்டன், சிவா அரவிந்த், வினோத் முன்னா, தாரிணி, கவிதா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.
வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்திருக்கிறது.
வரும் 12ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் சிறப்புக் காட்சி சென்னையில் திரையிடப்பட்டது.
அதன் பிறகுச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய குமரன், "இந்தப் படத்தில் சினிமா என் லட்சியம் என்றொரு டயலாக் வரும். உண்மையில் எனக்கு அது மிகப் பெரிய லட்சியம்.
கிட்டத்தட்ட இது என்னுடைய 15, 16 ஆண்டுக் கால இலட்சியம். சினிமாவில் ஹீரோ ஆகிவிட வேண்டும் என்று கனவு கண்டேன். அந்தக் கனவை நனவாக்கியது வீனஸ் இன்ஃபோடெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளரான கணேஷ் சார்.
என்னுடைய குடும்பத்தினருக்குத் திரை உலக பின்னணி கிடையாது. அப்பா டீ கடையில் வேலை பார்த்தவர்.
அவர் நீ சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்று சொன்னார். அவருக்கும் அந்த ஆசை இருந்தது. எனக்கும் அந்த ஆசை இருந்தது. அவருடைய கனவை நான் நனவாக்க வேண்டும் என்று முயன்றேன்.
எங்கெங்கோ தேடி அலைந்து கடைசியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கத் தொடங்கினேன்.
அதன் பிறகு தான் எனக்கான அங்கீகாரம் கிடைக்கத் தொடங்கியது.

தற்போது குமார சம்பவம் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகிறேன். இதற்கும் உங்களின் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.
குமார சம்பவம் என் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம். இது எனக்கு எமோஷனலாகவும் இருக்கிறது. திருப்தியாகவும் இருக்கிறது.
இயக்குநர் பாலாஜி வேணுகோபாலும் நானும் யூட்யூப் தொடங்கிய காலத்திலிருந்து நண்பர்கள். இன்று இருவரும் இணைந்து ஒரு படத்தை உருவாக்கி இருக்கிறோம்.
இந்தத் திரைப்படம் ஃபன் ஃபில்டு ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கிறது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் இந்தப் படம் கண்டிப்பாகப் பிடிக்கும்” என்று நெகிழ்ச்சியாகப் பேசியிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

