இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம்!
கொழும்பு: இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு நிர்வாகம் வெளியிட்ட தற்காலிக புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் இந்திய சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.
இது குறித்து இலங்கை சுற்றுலா மேம்பாட்டு நிர்வாகம் தெரிவிக்கையில், ஆகஸ்ட் மாதத்தில் ஒட்டுமொத்தமாக 1,98,235 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்திருப்பதாகவும், கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த எண்ணிக்கை1,64,609 ஆக இருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் ஜப்பானை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்தில் 46,473 சுற்றுலாப் பயணிகளுடன் இந்தியா முதலிடத்திலும், 17,764 சுற்றுலாப் பயணிகளுடன் இங்கிலாந்து இரண்டாவது இடத்திலும் அதனை தொடர்ந்து 12,500 பயணிகளுடன் ஜெர்மனி மூன்றாவது இடத்திலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் 15,66,523 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ள நிலையில், இந்திய சுற்றுலாப் பயணிகள் 3,25,595 பேரும், அதைத் தொடர்ந்து இங்கிலாந்திலிருந்து 1,51,000 பேரும் அதே வேளையில் ரஷியாவிலிருந்து 1,18,000 பேரும் வருகை தந்துள்ளனர்.
சுற்றுலா மேம்பாட்டு நிர்வாகத்தின் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையானது, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 20.4 சதவிகிதம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.88.18 ஆக நிறைவு!
Indian tourists continue to be at the top of foreign tourist arrivals in Sri Lanka in August, according to the provisional figures released by the Tourism Development Authority.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


