Stalin: இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது - முதல்வர் பேச்சின் பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான ஜெர்மனி சென்றுள்ளார். ஸ்டாலினின் ஜெர்மனி பயணத்தில் ரூ.3,201 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதற்கான முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் 6,500 பேருக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று சொல்லப்படுகிறது.

ஜெர்மனியில் ஸ்டாலின்

இதுகுறித்து ஜெர்மனியில் பேசியிருக்கும் ஸ்டாலின், "ஜெர்மனி உடனான பொருளாதார உறவை மேலும் வலுப்படுத்த நீங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவிலேயே அதிக அளவிலான தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு பொருளாதாரத்தில் இரட்டை இலக்க வளர்ச்சி பெற்று நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக உள்ளது.

ஜெர்மனியில் ஸ்டாலின்
ஜெர்மனியில் ஸ்டாலின்

நவீன உற்பத்தி, பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மோட்டார் வாகன தொழில்நுட்பத்தில் ஜெர்மனி வலிமையாக உள்ளது. Made in Tamilnadu என்பது தரமும் திறனும் கொண்ட ஒரு பெயராக உருவாகி உள்ளது. ஜெர்மனியின் துல்லியத்தையும் தமிழ்நாட்டின் ஆற்றலையும் ஒன்றிணைத்தால் புதிய வளர்ச்சிப் பாதையை உருவாக்க முடியும். இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது" என்று பேசியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.