கடந்த 39 மாதங்களாக ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதால் 12.6 பில்லியன் டாலர்களை சேமித்த இந்தியா

புதுடெல்லி: கடந்த 39 மாதங்​களாக ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெயை இந்​தி​யா, இறக்​குமதி செய்​துள்​ள​தால் சுமார் 12.6 பில்​லியன் அமெரிக்க டாலர்​களை சேமித்​துள்​ளது. ரஷ்​யா, உக்​ரைன் இடையே​யான போர் தொடங்​கியதைத் தொடர்ந்து ரஷ்​யா​விட​மிருந்து அதிக அளவில் கச்சா எண்​ணெயை இந்​தியா குறைந்த விலை​யில் வாங்கி பயன்​படுத்தி வரு​கிறது.

அதே​நேரத்​தில் ரஷ்​யா​விடம் இருந்து இந்​தியா எண்​ணெய் வாங்​கக் கூடாது, ஏனெனில் அது அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பொருளா​தார ரீதி​யில் உதவு​கிறது என்று அமெரிக்கா குற்​றம் சாட்டி வரு​கிறது. ஆனால், இந்​தியா தனது சொந்த எரிசக்தி பாது​காப்​பை​யும், மக்​களின் நலனை​யும் கருத்​தில் கொண்டே இந்த முடிவை எடுத்​த​தாக வாதிட்டு வரு​கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.