Dinesh Mangaluru: `கே.ஜி.எஃப் பட நடிகர் காலமானார்; திரைப்பிரபலங்கள் இரங்கல்
பிரபல கர்நாடக நடிகர் தினேஷ் மங்களூரு காலமானார்.
கர்நாடக திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருந்தவர் நடிகர் தினேஷ் மங்களூரு.
ராணா விக்ரம், அம்பரி, சவாரி, இன்டி நின்னா பேட்டி, ஆ டிங்கி மற்றும் ஸ்லம் பாலா போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்த இவர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.
தவிர கே.ஜி.எஃப் படத்தில் பாம்பே டான் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.
நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்த இவர் இதுவரைக்கும் 80-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் தினேஷ் மங்கப்ளூரு இன்று (ஆகஸ்ட் 25) உடல்நலக் குறைபாட்டால் உயிரிழந்தார்.
அவரின் மறைவிற்கு கர்நாடக திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


