மதராஸி: 15 வருஷத்துக்கு அப்புறம் நான் தமிழ் படத்துல நடிக்க இதுதான் காரணம் - பிஜு மேனன்
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். இந்த நிலையில், இப்படத்தின் இசைவெளியீட்டு சென்னையில் இன்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பேசிய பிஜு மேனன், "முருகதாஸ் சார் படத்துல நடிக்கணும்னு ரொம்ப ஆசை.
மதராஸி திரைப்படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. நான் அனிருத்தின் மிகப்பெரிய ரசிகன்.

தமிழுக்கு நன்றி! இந்த படத்தோட சப்ஜெக்ட், கேரக்டர் சொன்னாரு (முருகதாஸ்).
அதுதான் 15 வருடங்களுக்கு பிறகு இங்கு வந்ததுக்கு காரணம். தமிழ் சினிமா வளர்ந்துகிட்டே இருக்கு." என்று கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

