தங்கம் போல, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்கப்படுவதில்லை? - நிபுணர் விளக்கம்

தங்கத்தைப் போலவே, வெள்ளியின் விலையும் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.

ஆனால், தங்கத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, நாம் வெள்ளிக்கு வழங்குவதில்லை.

இதற்கு தங்கத்தின் மதிப்பு, தோற்றம், பாரம்பரியமாக நாம் அதற்கு அளிக்கும் முக்கியத்துவம் போன்ற ஏகப்பட்ட காரணங்கள் இருக்கின்றன.

இன்னொரு பக்கம், தங்கத்தை அவசர சூழல்களில் அடமானம் வைக்க முடியும். ஆனால், வெள்ளி அப்படி இல்லை என்பதும் மிக முக்கியமான விஷயம்.

சமீபத்திய இந்திய ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதலின் படி, 999 தரத்திலான வெள்ளி நகைகளை அடமானம் வைக்க முடியும்.

ஆனால், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை.

பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்
பொதுவாக, வெள்ளிக்கு ஏன் கடன் வழங்குவதில்லை என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

"ஒரு பொருள் அல்லது சொத்து காலம் கடந்தும் தனது மதிப்பைப் பாதுகாத்துக் கொள்ளும் தன்மை கொண்டிருந்தால், அது Store of Value ஆகும்.

பணவீக்கம் ஏற்பட்டாலும், மதிப்பு குறையாமல் இருக்கும் பொருளை Inflation hedge என்று சொல்வார்கள்.

இப்படி பல காரணிகள் தங்கத்தில் இருக்கிறது.

அடுத்ததாக, வங்கிகள் மற்றும் உலக நாடுகள் வெள்ளியைச் சேமித்து வைப்பதில்லை.

கோல்டு ஸ்டேன்டர்டு

மேலும், ஒரு காலத்தில், ஒரு நாட்டில் இருக்கும் தங்கத்தின் இருப்பிற்கு ஏற்ப, பணத்தை அச்சிடலாம். இதற்கு Gold Standard என்று பெயர். ஆனால், இந்த நடைமுறை 1945-ம் ஆண்டிற்கு முன்பே முடிந்துவிட்டது.

கோல்டு ஸ்டான்டர்ட் தான் இருந்ததே தவிர, சில்வர் ஸ்டான்டர்ட் இருந்தது இல்லை.

இப்படி பல ஆண்டு காலமாக, தங்கத்திற்கு தான் அதிக முக்கியத்துவம் இருந்துள்ளது. மேலும், எப்போதுமே தங்கம் ஸ்டோர் ஆஃப் வேல்யூ ஆகவும், பணவீக்க ஹெட்ஜ் ஆகவும் இருந்து வருகிறது.

வெள்ளி விலை தங்கம் விலை ஏறும்போது ஏறுகிறது. அதற்கென தனி மதிப்பு நிர்ணயிக்கப்படவில்லை.

அதனால் தான், வெள்ளிக்கு கடன்கள் வழங்கப்படுவதில்லை.

வெள்ளியை எடுத்துகொண்டால், அது மொபைல் போன், சிப் போன்றவற்றின் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படுகிறது.

தங்கம், வெள்ளி
தங்கம், வெள்ளி

ஒப்பீடு

இப்போது தங்கம், வெள்ளியை ஒப்பிட்டு பார்க்கலாம்.

தங்கம் ஸ்டோர் ஆஃப் வேல்யூவைச் சார்ந்தது. வெள்ளி தொழிற்சாலை பயன்பாட்டைச் சார்ந்தது.

தொழிற்சாலைகளில் வெள்ளியின் டிமான்ட் கூடலாம், குறையலாம். ஆனால், எப்போதும் தங்கத்திற்கு ஸ்டோர் ஆஃப் வேல்யூ குறைந்துவிடாது.

இதன் அடிப்படையில் தான், கடன் வழங்கப்படும். அதனால் தான், வெள்ளிக்கு கடன் வழங்கப்படுவதில்லை" என்கிறார் பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸ்.

பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட தினம் தினம் தகவல்களைத் தெரிந்துகொள்ள Vikatan Play-ல் Opening Bell Show தினமும் காலை கேளுங்கள்.

Vikatan Play-ல் Opening Bell Show
Vikatan Play-ல் Opening Bell Show

Business, Money, Invest, Personal Finance தொடர்பான Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

வணக்கம்,

Personal Finance, மியூச்சுவல் ஃபண்ட், பங்குச்சந்தை, முதலீடு, சேமிப்பு போன்றவைகளில் பக்கா அப்டேட்டுகளும், ஆலோசனைகளும்.

கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...

https://chat.whatsapp.com/IdbC2MFyIM6E5EHRomv2l4

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.