அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!
அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடலில் திங்கள்கிழமை (ஆக.18) வாக்கில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
இதற்கிடையே மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஆக.17) தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
ஓரிரு இடங்களில் மணிக்கு 50 கி.மீ.வேகத்தில் காற்று வீசக்கூடும். ஆக.17-இல் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு(காலை 10 மணி வரை) சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, நீலகிரி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... நாய் படும் பாடு!
The Chennai Meteorological Department has stated that there is a possibility of rain in Chennai and 11 districts for the next 2 hours.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

