அல்ஜீரியா: ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலி!

அல்ஜீரியா நாட்டில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 18 பேர் பலியாகினர்.

வட ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியாவில் தலைநகர் அல்ஜியர்ஸில் பயணிகள் பேருந்து ஒன்று ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது. விபத்தினையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர் மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.

இருப்பினும், பேருந்தில் பயணித்தவர்களில் 18 பேர் பலியாகினர். மேலும், காயமடைந்த 9 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களும் மோசமான நிலையில் இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

பேருந்தை அதிவேகமாக இயக்கியதால், நிலைதடுமாறி ஆற்றில் விழுந்ததாகக் கூறப்படுகிறது.

Anger in Algeria as 18 killed by bus plunge into river

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.