`StartUp சாகசம் 37 : `உணவு கலப்படம் என்ற பெரும் சவால்.!’ - அமெரிக்க ரிட்டர்னின் `AMMA GENOMICS’ கதை

இந்தியாவில் உணவு என்பது வெறும் பசியாற்றும் பொருள் மட்டுமல்ல, அது நம் பாரம்பரியத்தின் மற்றும் ஆரோக்கியத்தின் அடையாளம். "உணவே மருந்து" என்ற நம் முன்னோர்களின் தத்துவம் இன்றும் பொருத்தமானதாக உள்ளது. ஆனால், இன்று வேகமாக மாறிவரும் வாழ்க்கை முறையால், உணவுப் பாதுகாப்பு ஒரு பெரிய சவாலாக மாறியுள்ளது.

  • கலப்படம் மற்றும் நச்சுத்தன்மை: அதிகரித்து வரும் தேவை காரணமாக, லாப நோக்கத்திற்காக உணவில் கலப்படம் செய்வது அதிகரித்துள்ளது. பூச்சிக்கொல்லிகள், இரசாயனங்கள் மற்றும் செயற்கை நிறமூட்டிகள் போன்றவை உணவில் கலக்கப்படுகின்றன. இது உடனடி வயிற்று உபாதைகள் மட்டுமின்றி, நீண்டகாலத்தில் புற்றுநோய், மலட்டுத்தன்மை மற்றும் தன்னுடல் தாக்குநோய்கள் (autoimmune diseases) போன்ற தீவிர நோய்களுக்கும் வழிவகுக்கின்றன.

  • ஊட்டச்சத்து குறைபாடு: இன்றைய பதப்படுத்தப்பட்ட உணவுகளில் (processed foods) ஊட்டச்சத்து மதிப்பு குறைவாக உள்ளது. இது மக்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் பாதிக்கிறது.

  • விழிப்புணர்வு இல்லாமை: கலப்பட உணவுகளால் ஏற்படும் அபாயங்கள் குறித்து மக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை. இதன் காரணமாக, பலரும் தரமற்ற உணவுகளைத் தெரியாமலேயே வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

உணவு பாதுகாப்பு ஆணையம்

இந்திய அரசு இந்தச் சவால்களை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உணவுப் பாதுகாப்பு விதிகளை உருவாக்கி, அவற்றை நடைமுறைப்படுத்துகிறது.

  • கண்காணிப்பு மற்றும் சோதனை: FSSAI, நாடு முழுவதும் உள்ள அங்கீகரிக்கப்பட்ட உணவுப் பரிசோதனை ஆய்வகங்கள் (Food Testing Labs) மூலம் உணவு மாதிரிகளைப் பரிசோதித்து, அதன் தரத்தை உறுதி செய்கிறது. இந்த ஆய்வகங்கள் நுண்ணுயிரியல், ரசாயனவியல் மற்றும் ஊட்டச்சத்துப் பரிசோதனைகளை மேற்கொள்கின்றன.

  • தொழில்நுட்பப் பயன்பாடு: நடமாடும் ஆய்வகங்கள் (Mobile Labs), விரைவான பரிசோதனை கருவிகள் (Rapid Testing Kits), மற்றும் நவீன டிஎன்ஏ பரிசோதனை போன்ற தொழில்நுட்பங்கள் கலப்படத்தை விரைவாகக் கண்டறிய உதவுகின்றன.

  • மக்களுக்கு விழிப்புணர்வு: "ஜாகோ கிரஹக் ஜாகோ" போன்ற விழிப்புணர்வுப் பிரச்சாரங்கள் மூலம் மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு குறித்த தகவல்கள் அளிக்கப்படுகின்றன.

AMMA GENOMICS

அமெரிக்காவில் பல வருடங்கள் பணியாற்றிய அனுபவத்துடன், டாக்டர் பிரதீப் சள்ளில் மற்றும் அவரது மனைவி பிரியா சள்ளில் ஆகியோர் தமிழ்நாட்டில் அம்மா ஜெனோமிக்ஸ் ( AMMA GENOMICS ) நிறுவனத்தைத் தொடங்கினர். உணவுப் பரிசோதனை, ஆராய்ச்சி, மற்றும் கல்வி மூலம், இந்நிறுவனம் தமிழகத்தின் உணவுப் பாதுகாப்பில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி வருவதை இலக்காக கொண்டு செயல்படுத்தி  வருகிறது.

சரியான பரிசோதனைகள் மற்றும் மக்களின் விழிப்புணர்வு மூலம், உணவு கலப்படம் என்ற பெரும் சவாலை வெல்ல முடியும் என்பதை அம்மா ஜெனோமிக்ஸ் போன்ற நிறுவனங்கள் நிரூபித்து வருகின்றன. இனி அம்மா ஜெனோமிக்ஸ் வளரும் சாகசக் கதையைக் டாக்டர் பிரதீப் சள்ளில் மற்றும் அவரது மனைவி பிரியா சள்ளில்  ஆகியோரிடம் கேட்போம்...

டாக்டர் பிரதீப் சள்ளில்
டாக்டர் பிரதீப் சள்ளில்
``பல துறைகள் தொழில்நுட்பத்திலும் பிற வழிகளிலும் முன்னேறிக் கொண்டிருக்கும் வேளையில், நீங்கள் மட்டும் உணவுப் பரிசோதனைத் துறையைத் தேர்ந்தெடுத்தது ஏன்? எது உங்களை இந்தத் துறை நோக்கி இழுத்தது?”

``நான் பி.எஸ்.சி., எம்.எஸ்.சி. உயிரியல் வேதியியல் (Biochemistry) முடித்து, முனைவர் பட்டத்தை புற்றுநோய் உயிரியலில் (Cancer Biology) பெற்றேன். அப்போது, 1997-இல், புற்றுநோயும் உணவும் என்ற ஒரு புத்தகத்தை நான் வெளியிட்டேன். ஏனென்றால், உலகெங்கிலும் 1997-இல் வெளிவந்த பல ஆய்வுகள், தவறான உணவுப் பழக்கங்கள் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று சுட்டிக்காட்டின. உணவில் நச்சுத்தன்மை (toxic) இருந்தால், பலவிதமான உடல்நலக் கோளாறுகள் ஏற்படும்.


ஒருமுறை ஹைதராபாத்தில் நடந்த ஒரு கருத்தரங்கில் (conference) கலந்துகொண்டேன். அங்கு ஒரு கிராமத்தில் குழந்தைகள் பிறப்பதே இல்லை. மக்கள் இதை அம்மனின் கோபம் என்று நம்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால், ஒரு ஆய்வாளர் (researcher) நேரடியாகச்அந்த கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்ததில் , அந்த கிராமத்தில் திராட்சை விவசாயம் அதிகம். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் (pesticides) பயன்படுத்துவதைப் பற்றி அறியாமல், கைகளால் கலக்கி, முகக்கவசம் அணியாமல் வேலை செய்திருக்கிறார்கள். இது 1992-93-ஆம் ஆண்டு வாக்கில் நடந்தது. மதியம், பெண்கள் தங்கள் கணவர்களுக்கு உணவு கொண்டு வருவார்கள். பூச்சிக்கொல்லி கலக்கிய கையைக் கழுவாமல் சாப்பிட்டது மட்டுமில்லாமல், மீதியை அவர்களும் சாப்பிட்டிருக்கிறார்கள். இதனால் கணவரின் விந்தணுக்களும், மனைவியின் கருமுட்டைகளும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால்தான் குழந்தை பாக்கியம் இல்லாமல் போயிருக்கிறது என்பதை கண்டறிந்தர், இதுபோன்ற பல ஆராய்ச்சிகள் மற்றும் கருத்தரங்குகள் எனக்கு உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தின.

பிறகு, 1997-ஆம் ஆண்டு, நியூயார்க்கில் உள்ள ராஸ்வெல் பார்க் புற்றுநோய் நிறுவனத்தில் (Roswell Park Cancer Institute) பணியாற்றச் சென்றேன். அங்கும், உணவின் மூலமாக குழந்தைகளுக்கு வரும் புற்றுநோய்கள் குறித்து நாங்கள் ஆராய்ச்சி செய்தோம். அதன் பிறகு, 2000-ஆம் ஆண்டில், மற்றொரு உணவுப் பரிசோதனை நிறுவனத்தில் இணைந்து 19 ஆண்டுகள் பணியாற்றினேன். அங்கேயும், உணவில் உள்ள கலப்படம் (adulteration) அமெரிக்காவில் கூட எவ்வளவு பெரிய சுகாதாரப் பிரச்சனைகளை (health problems) ஏற்படுத்துகிறது என்பதை நான் கண்டேன்.

பின்னர் கோவிட் காலத்தில், என் பெற்றோரைப் பார்க்க சென்னை வந்தபோது, ஊரடங்கால் (lockdown) திரும்பிச் செல்ல முடியவில்லை. அப்போதுதான் என் நண்பர்,  இவ்வளவு அனுபவத்தைக்கொண்ட நீ இங்கேயே ஏன் ஒரு பரிசோதனை ஆய்வகத்தை (diagnostic lab) ஆரம்பிக்கக் கூடாது? என்று கேட்டார். அப்போது போட்ட விதை பின் ஒரு இடத்தில் வேலை செய்த பணியாளர்கள் டீ அருந்துவதைப் பார்த்தபோது, அந்த டீயை பரிசோதிக்க வேண்டும் என்று தோன்றியது. உடனே அந்த டீயில் இருந்த பாலை பரிசோதித்தபோது, அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்படாத பல இரசாயனங்கள் (chemicals) கலந்திருப்பது தெரியவந்தது. அப்போதுதான், மருத்துவ ஆய்வுகள் மட்டும் போதாது, உணவையும் பரிசோதிக்க வேண்டும் என்று உணர்ந்தேன்.

மேலும், இப்போது மக்களுக்கு விழிப்புணர்வு (awareness) அதிகரித்துள்ளது. 20 ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கரை நோய்க்காக மருத்துவரிடம் சென்றால், அவர் மாத்திரை மட்டுமே கொடுப்பார். ஆனால், இப்போது மருத்துவர்கள் மருந்துகள் மட்டும் போதாது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் (fiber-rich foods) சாப்பிட வேண்டும் என்றும், சர்க்கரை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகளை (refined carbohydrates) தவிர்க்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள். இது மருந்துகளால் மட்டும் நோய்களைக் குணப்படுத்த முடியாது என்பதையும், உணவுக்கு ஒரு பெரிய பங்கு இருப்பதையும் உணர்த்துகிறது. நமது சித்தர்கள் சொன்னது போல, உணவே மருந்து என்பதில் எனக்கும் நம்பிக்கை இருந்தது. அதனால் அம்மா ஜெனோமிக்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தோம்.”

``நீங்கள் பல்வேறு துறைகளில் பணியாற்றும்போது, குறிப்பாக பால் பொருட்கள் மற்றும் உணவகங்கள் போன்ற துறைகளில், எந்த மாதிரியான சவால்களை எதிர்கொள்கிறீர்கள்? இந்த வேறுபட்ட தேவைகளைப் பூர்த்தி செய்ய உங்கள் தர உறுதி அணுகுமுறைகளை (quality assurance approaches) எவ்வாறு தனிப்பயனாக்குகிறீர்கள்?”

``பால் பொருட்கள் துறையில் பல சவால்கள் உள்ளன. இப்போதெல்லாம், நிறுவனங்கள் மட்டுமல்ல, பொதுமக்களும் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய எங்களிடம் பரிசோதனைக்காக மாதிரிகளைக் கொண்டு வருகிறார்கள். அம்மா ஜெனோமிக்ஸ் நிறுவனம் உண்மையான முடிவுகளைத் தரும் என்ற நம்பிக்கையில் மக்கள் எங்களிடம், இந்த பாலில் யூரியா, ஃபார்மலின் போன்ற பாதுகாப்புப் பொருட்கள் (preservatives) கலந்திருக்கிறதா? என்று கேட்கிறார்கள். பாக்கெட் பாலாக இருந்தாலும் சரி, வீட்டில் கறந்த பாலாக இருந்தாலும் சரி, சில சமயங்களில் அதிக அளவில் கலப்படம் இருப்பதைக் காண்கிறோம். பன்னீர், நெய் போன்ற பிற பால் பொருட்களிலும் கலப்படம் காணப்படுகிறது. நாட்டுப் பசு மாட்டுப் பால் என்று சொல்லி, கலப்படம் செய்யப்பட்ட பால் விற்கப்படுகிறது. 


எங்களது ஆய்வகம் (lab) A1 மற்றும் A2 பால் வகைகளுக்கான பரிசோதனைக்கு ISO சான்றிதழ் பெற்ற ஆய்வகம்.  இந்தியாவில்  A2 பால் முக்கியமானதாகக் கருதப்படுகிறது, ஏனெனில் மேலை நாடுகளில் நெஸ்லே போன்ற நிறுவனங்கள் கூட A2 பால் சாக்லேட்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளன. A2 பாலில், A1 BCM பெப்டைடு (peptide) என்ற ஒரு புரதம் (protein) இல்லை. இந்தப் புரதம் பல நோய்களுக்குக் காரணமாக இருப்பதால், மக்கள் அதைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். இவை அனைத்தும் எங்களுக்கு சவால்களாக இருந்தன. ஆனால், எங்கள் தொழில்நுட்பம் (technology) மூலம் அவற்றைக் கண்டறிந்து சரியான முடிவுகளை வழங்குகிறோம்.”

உணவுப் பொருட்கள் தயாரிப்பாளர்களுக்கும், அவற்றைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கும் இடையே உணவுத் தரம் குறித்து பல கவலைகள் உள்ளன. இங்கே உங்களது பணி என்ன?

``மக்கள் எங்களிடம், வெறுமனே பரிசோதனை மட்டும் செய்கிறீர்கள், ஆனால் எந்த உணவு ஆரோக்கியமானது? எது நல்லது? எது கெடுதல் இல்லாதது? என்று கேட்க ஆரம்பித்ததால்தான், எனது மனைவி பிரியா சள்ளில் மாவோ மிக்ஸ் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.


இன்று, நாங்கள் சில நம்பகமான தயாரிப்பாளர்களுடன் இணைந்து சில உணவுப் பொருட்களை உருவாக்குகிறோம். கலப்படம் இல்லாமல், ஒவ்வொரு பொருளையும் பரிசோதித்து மட்டுமே மாவோ மிக்ஸ் மூலம் விற்கிறோம். இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கூட, அமெரிக்காவில் கூட இந்த தரமான உணவுப் பொருட்கள் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்கள்.”

``ஒவ்வொரு உணவுக்கும் ஒவ்வொரு வகையான பரிசோதனை உண்டு. மஞ்சள், அரிசி, மசாலா, பால் பொருட்கள், நெய் போன்றவற்றுக்கு எவ்வாறு பரிசோதனை செய்கிறீர்கள் என்பதை உதாரணத்துடன் விளக்க முடியுமா?”

``அரசாங்கத்தின் FSSAI (Food Safety and Standards Authority of India) விதிகளை 100% கடைபிடிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். அவர்கள் கேட்கும் ஊட்டச்சத்து உண்மைகள் (nutritional facts) அனைத்தையும் நாங்கள் வழங்குகிறோம். ஆனால், அது மட்டும் போதாது. மக்களுக்கு தனிப்பட்ட முறையில், இந்த உணவில் எவ்வளவு மூலிகைத்தன்மை இருக்கிறது?, எவ்வளவு பாலிஃபீனால்கள் (polyphenols) மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்கள் (antioxidants) உள்ளன? என்று அறிய வேண்டும். ஏனெனில், இன்றைய நோய்களுக்கு முக்கியக் காரணம் அழற்சி (inflammation).


சித்த மருத்துவத்தில் அக்னி, உஷ்ணம் என்று சொல்வார்கள். எந்த உணவுகள் அழற்சியைக் குறைக்கும், அவற்றில் எவ்வளவு ஆன்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் உள்ளன என்பதை பரிசோதிப்பது அவசியம். மஞ்சள் ஒரு சிறந்த உதாரணம். மஞ்சளில் குர்குமின் (curcumin) என்ற ஒரு வகை பாலிஃபினால் மட்டுமே மக்களுக்குத் தெரியும். ஆனால், அதைத் தவிர ரூட்டின் (rutin), குர்செட்டின் (quercetin), ஆந்தோசயனிடின்ஸ் (anthocyanidins), ஹெஸ்பெரிடின் (hesperidin), ரெஸ்வெரட்ரால் (resveratrol) போன்ற பல மூலிகைத்தன்மைகள் உள்ளன. ஒவ்வொரு மூலிகைத் தன்மைக்கும் உடலில் ஒரு குறிப்பிட்ட செயல்பாடு உள்ளது. உதாரணமாக, குட்டி வெங்காயத்தில் உள்ள குர்செட்டின் கணையத்திற்கு (pancreas) மிகவும் அவசியம். நிலக்கடலை மற்றும் திராட்சையில் உள்ள ரெஸ்வெரட்ரால் (Resveratrol)புற்றுநோயைத் தடுக்கும். ரூட்டின் இரத்தக் குழாய்களை (blood capillaries) வலுப்படுத்துவதோடு, வெரிகோஸ் வெயின்களைத் (varicose veins) தடுக்கும்.

எங்களது ஆய்வகத்தில், இந்த மூலக்கூறுகளை உணவில் மட்டுமல்லாமல், அதை உட்கொள்ளும் மக்களின் சிறுநீர் (urine) மற்றும் இரத்தம் (blood) ஆகியவற்றிலும் பரிசோதிக்கிறோம். உங்கள் உடலில் இந்தச் சத்துக்கள் போதுமான அளவு உள்ளதா? என்று கேட்டறிந்து, தேவையான உணவுகளைச் சாப்பிடும்போது உடல் வலுவாகும். உணவுப் பரிசோதனை செய்து, சரியான உணவுகளை எடுத்துக் கொண்டதால் விரைவில் குணமடைகிறார்கள். வெறும் வைட்டமின்களை (vitamins) மட்டும் பார்க்காமல், பாலிஃபீனால்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்ட்களையும் பார்ப்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கிறது.”

``செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) மற்றும் தானியங்கு முறைகள் (automation) போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்கள் உணவுப் பரிசோதனைத் துறையை எவ்வாறு மாற்றுகின்றன? இந்தப் போட்டியில் முன்னணியில் இருக்க உங்கள் நிறுவனம் என்ன புதுமைகளை அறிமுகப்படுத்தியுள்ளது?”

``நாங்கள் உணவுகளில் மரபணுப் பரிசோதனை (genetic testing), மூலக்கூறுப் பரிசோதனை (molecular testing), ஆர்என்ஏ வெளிப்பாடுப் பரிசோதனை (RNA expression) போன்றவற்றைச் செய்கிறோம். நான் 25 ஆண்டுகளுக்கு மேல் அமெரிக்காவில் மருத்துவமனைகள் மற்றும் பரிசோதனை மையங்களில் பணியாற்றியதால், இது எனக்கு நன்றாகவே தெரியும்.

இப்போது, க்ளூட்டன் (gluten) பலருக்கு ஒவ்வாமையை (allergy) ஏற்படுத்துகிறது. ஆனால், க்ளூட்டன் உள்ள கோதுமையைச் சாப்பிட விரும்புபவர்களும் இருக்கிறார்கள். நாங்கள் க்ளூட்டன் குறைவாக உள்ள கோதுமை வகைகளைத் தேடிக் கண்டறிகிறோம். அதற்காக விவசாயிகளுடன் (farmers) இணைந்து பணியாற்றுகிறோம். அவர்களுக்கு நாங்கள் மண்ணின் நுண்ணுயிர்ப் பரிசோதனைய

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.