Train Ticket: தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங் இந்த வாரம் முதல் தொடக்கம்!
தீபாவளி வந்துடுச்சு. என்ன அதுக்குள்ளேயுமா? என்று ஷாக் ஆகிவிடாதீர்கள்.
நாளை முதல் தீபாவளி ரயில் டிக்கெட் புக்கிங் தொடங்கப்போகிறது.
இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 20-ம் தேதி வர உள்ளது. அதுவும் திங்கட்கிழமை. ஆக, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை, ஆப்ஷனலாக, செவ்வாய்க்கிழமையும் லீவ் கிடைக்கும்.
புக்கிங் எப்போது?
தீபாவளி முந்தைய வாரத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்று முதல் தொடங்கி உள்ளது.
அக்டோபர் 17-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வருகிற திங்கட்கிழமை காலை 8 மணிக்கு தொடங்க உள்ளது.
அக்டோபர் 18-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்கும், அக்டோபர் 19-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் புதன்கிழமை காலை 8 மணிக்கும், அக்டோபர் 20-ம் தேதிக்கான ரயில் டிக்கெட் புக்கிங் வரும் வியாழக்கிழமை 8 மணிக்கும் தொடங்க உள்ளது.
இந்த நேரங்களில் டான் என டிக்கெட் புக் செய்துவிட்டால், கடைசி நேரத்தில் அதிக விலை கொடுத்து தனியார் பஸ்களில் ஊருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
அதனால், சீக்கிரம் கரெக்டா இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகோங்க மக்களே!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


