Coolie: அடுத்து அஜித் குமாரை வைத்து படம் எடுப்பீர்கள்? - இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில்

`லியோ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் கூலி படம் இன்று (ஆகஸ்ட்14) திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகி இருக்கிறது.

இப்படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

கூலி திரைப்படம்

இந்நிலையில், குரோம்பேட்டை வெற்றி திரையரங்கில் படம் பார்த்த பிறகு லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசியிருக்கிறார். கூலி படத்தின் ரெஸ்பான்ஸ் ரொம்ப நன்றாக வந்திருக்கிறது. கைதட்டல்கள்தான் இதற்கான பதில்" என்று நெகிழ்ச்சியாகப் பதிலளித்திருக்கிறார்.

தொடர்ந்து, "ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய்யை வைத்து படம் எடுத்துவிட்டீர்கள். எப்போது அஜித்தை வைத்து படம் எடுப்பீர்கள்?" என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர். அதற்குப் பதிலளித்த லோகேஷ் கனகராஜ், "அஜித்துடன் எப்போது படம் எடுக்க வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போது படம் பண்ணுவேன்" என்று தெரிவித்திருக்கிறார்.

அனிருத்
அனிருத்

அதேபோல படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அனிருத், "தலைவரின் 50-வது வருடத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆடினே இருப்பேன் என ஒரு மீம்ஸ் பார்த்தேன். இனி நான் ஆடினே இருப்பேன்" என்று அனிருத் உற்சாகமாகப் பேசியிருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.