``படுகொலை செய்யப்பட்ட SI சண்முகவேல் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிவாரணம் - முதல்வர் ஸ்டாலின்
திருப்பூர் உடுமலை அருகே கொலை செய்யப்பட்ட எஸ்.ஐ. சண்முகவேல் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டிருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் சின்னகனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் எம்எல்ஏ மகேந்திரனுக்குச் சொந்தமான தோட்டத்தில் வேலை செய்யும் தந்தைக்கும், மகனுக்கும் ஏற்பட்ட பிரச்னை தொடர்பாக விசாரிக்கச் சென்ற குடிமங்கலம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகவேல் கொடூரமாக வெட்டிக் கொலை செய்பட்டிருக்கிறார்.
இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஐஜி, டிஐஜி, காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
குற்ற செயலில் ஈடுபட்டவர்களை விரைந்து கைது செய்ய வலியுறுத்திய முதல்வர் ஸ்டாலின், SI சண்முகவேல் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்து, ரூ.1 கோடி நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


