8 ஆம் வகுப்பு மாணவியைத் திருமணம் செய்த 40 வயது பள்ளி ஆசிரியர் - தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!
40 வயதுடைய பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தியாவில் குழந்தைத் திருமணம் தடை செய்யப்பட்டிருக்கும் நிலையில், தெலங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நந்திகாமாவில், 40 வயது பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியைத் திருமணம் செய்துகொண்டிருக்கிறார்.
இந்தத் திருமணம் குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்துதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதனைத் தொடர்ந்து திருமணம் செய்துகொண்ட ஆசிரியர் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நட்பபது அதிர்ச்சியையும் வேதனையையும் உண்டாக்குகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


