Brad Pitt: F1 வெற்றிக்குப் பிறகு பிராட் பிட் படம் - ஒன்றிணையும் ஹாலிவுட்டின் டாப் இயக்குநர்கள்!

F1 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தன்னுடைய அடுத்தத் திரைப்படத்தின் பணிகளில் இறங்கிவிட்டார் பிராட் பிட்.

Cliff Booth - Once Upon a time in Hollywood

குவென்டின் டாரன்டினோவின் (Quentin Tarantino) ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் (Once Upon a Time in Hollywood) திரைப்படத்தின் கிளிஃப் பூத் (Cliff Booth) கதாபாத்திரத்தின் ஸ்பின் ஆஃப் திரைப்படமான தி அட்வென்ச்சர் ஆஃப் கிளிஃப் பூத் படத்தில்தான் பிராட் பிட் நடிக்கவிருக்கிறார்.

2019-ம் ஆண்டு குவென்டின் டாரன்டினோவின் ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் திரைப்படம் வெளிவந்திருந்தது.

டாரன்டினோ அதன் பிறகு ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட் படத்தின் கதையை விரிவுபடுத்தி நாவலாக 2021-ம் ஆண்டு எழுதத் தொடங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தி அட்வென்ச்சர் ஆஃப் கிளிஃப் பூத் திரைப்படத்திற்கு திரைக்கதையையும் எழுதினார்.

இப்படத்தை ஃபைட் கிளப், செவன் போன்ற படங்களை இயக்கிய டேவிட் ஃபின்சர் இயக்கவுள்ளார் என்ற செய்தி எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கிறது.

Brad Pitt - F1 Movie
Brad Pitt - F1 Movie

ஹாலிவுட்டின் இரண்டு முக்கியமானவர்கள் இப்படத்திற்காக ஒன்றிணைவது உலகமெங்கும் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது.

இத்திரைப்படம் நடிகர் பிராட் பிட், இயக்குநர் டேவிட் ஃபின்சர் கூட்டணி இணையும் மூன்றாவது திரைப்படம்.

1970-களில் நடக்கும் கதைக்களம் என்பதால் படத்திற்காக பிரத்தியேகமாக கலிஃபோர்னியாவில் செட்டும் அமைத்திருக்கிறார்கள்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.