MrBeast: 40 கோடி சந்தாதாரர்கள்; நேரில் வாழ்த்திய யூடியூப் CEO; யார் இந்த மிஸ்டர் பீஸ்ட் ஜிம்மி?

யூடியூபில் 40 கோடி சந்தாதாரர்களைப் பெற்ற முதல் யூடியூபர் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார் மிஸ்டர் பீஸ்ட் (Mr.Beast) சேனலை நடத்தி வரும் பிரபல யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன்.

இதனைக் கௌரவிக்கும் விதமாக யூடியூப் CEO நீல் மோகன் அவருக்குப் பிரத்யேக Play Button-ஐ வழங்கி கௌரவித்திருக்கிறார்.

மிஸ்டர் பீஸ்ட்

யார் இந்த மிஸ்டர் பீஸ்ட்?

1998 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினாவில் பிறந்தவர்தான் ஜிம்மி டொனால்ட்சன். 27 வயதுடைய இவர் அவருடைய ரசிகர்களால் மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.

தன்னுடைய 13 வயதில் MrBeast6000 என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார் மிஸ்டர் பீஸ்ட். வீடியோ கேம், ரியாக்சஷன் வீடியோ, funny games போன்றுதான் ஆரம்பத்தில் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார்.

ஆனால், இவரை உலகமே அறியச் செய்தது 2017 ஆம் ஆண்டில் I Counted to 100,000 என்ற வீடியோதான். 44 மணிநேரம் எடுத்து 21 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டதாக மாறியது அந்த வீடியோ.

மிஸ்டர் பீஸ்ட்
மிஸ்டர் பீஸ்ட்

அப்போதிருந்து, அவரது சேனலின் வீடியோக்கள், மற்றவர்களுக்குப் பரிசு கொடுக்கும் வீடியோக்கள் உலகளவில் பிரபலமடைந்து அவருக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொடுத்தன. மிஸ்டர் பீஸ்ட் ஒரு திறமையான தொழில்முனைவோரும் கூட. யூடியூப் தவிர ஃபீஸ்டபிள்ஸ் என்ற சாக்லெட் நிறுவனம் வைத்திருக்கிறார்.

தவிர, அவர் கிரிப்டோ மற்றும் NFT-யிலும் முதலீடு செய்கிறார். Coinbase போன்ற நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார். மேலும் மக்களுக்கு நன்கொடைகளையும் வழங்கி வருகிறார்.

MrBeast, MrBeast Gaming, Beast Reacts மற்றும் MrBeast Philanthropy உள்ளிட்ட யூடியூப் சேனல்களை வைத்திருக்கும் மிஸ்டர் பீஸ்ட்தான் உலகிலேயே அதிக சந்தாதாரர்களைப் பெற்ற யூடியூபர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார்.

மிஸ்டர் பீஸ்ட்
மிஸ்டர் பீஸ்ட்

மிஸ்டர் பீஸ்ட்டின் தற்போதைய சொத்தின் மதிப்பு 1 பில்லியன் டாலர்களை (தோராயமாக ரூ. 8,300 கோடி) எட்டியிருக்கிறது. இதில் பரம்பரை சொத்து எதுவும் இல்லை. அதாவது, அவர் தனது 27 வயதிலேயே கோடிக் கணக்கான ரூபாயைச் சொந்தமாகச் சம்பாதித்திருக்கிறார்.

30 வயதிற்குட்பட்ட, உலகின் இளம் வயது கோடீஸ்வரர்களில் 8 ஆவது கோடீஸ்வரர் என்ற அங்கீகாரத்தையும் மிஸ்டர் பீஸ்ட் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.