முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்... பரபரக்க வைத்த மர்ம நபர்!
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைசுற்றல் காரணமாக கடந்த திங்கட்கிழமை (ஜூலை 21), சென்னை, ஆயிரம் விளக்குப் பகுதி கிரீம்ஸ் சாலையில் இருக்கும் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டு, இன்று 7வது நாளாக மருத்துவர்களின் அறிவுரையின்படி ஓய்வெடுத்து வருகிறார். அங்கிருந்தே தனது பணிகளை கவனித்து வருகிறார். மருத்துவர்கள் வற்புறுத்தினாலும் ஓய்வெடுக்க மனமில்லை" என்று நேற்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் ஸ்டாலின். இன்று அவர் வீடு திரும்பலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் திடீரென இன்று அதிகாலையில் காவல் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்ட மர்ம நபர் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சென்னை ஆழ்வார்பேட்டை, கோட்டூர் புரத்தில் இருக்கும் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு பாதுகாப்புத் தீவிரமாகப் பலப்படுத்தப்பட்டது.
இரண்டுநாள் பயணமாக தமிழ்நாடு வந்திருக்கும் மோடி, நேற்று துத்துக்குடியில் புதுப்பிக்கப்பட்ட புதிய விமான நிலைய முனையத்தைத் திறந்து வைத்தார். இன்று கங்கை கொண்ட சோழபுரத்தில் மாமன்னன் இராஜேந்திர சோழனின் பிறந்தநாள் ஆடி திருவாதிரை விழாவில் கலந்துகொள்கிறார். இதற்கிடையில் முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வந்த புரளியான வெடிகுண்டு மிரட்டல் அதிகாலை முதலே காவல்துறைக்குப் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


