MS Dhoni: `44 வயதிலும் எப்படி புத்துணர்ச்சியுடன்..? - எம்.எஸ் தோனி அளித்த பதில்

இந்திய கிரிக்கெட் வீரார் எம்.எஸ் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களுக்கு உலக அளவில் ரசிகர்கள் இருப்பதைப் போல, 44 வயதைக் கடந்து, கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றப் பிறகும் அதே உற்சாகத்துடனும், புத்துணர்ச்சியுடனும் இருக்கிறார் என்பதும் ரசிகர்களிடம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதற்குக் காரணம் அவர் உடல் கொடுக்கும் ஒத்துழைப்பும் உடற்பயிற்சிகளும், டயட் முறைகளும்தான். தோனியின் தினசரி வாழ்க்கை முறை குறித்து பல்வேறு இடங்களில் பேசியிருக்கிறார்.

M S Dhoni - எம்.எஸ் தோனி

கடந்த ஆண்டு அவர் அளித்தப் பேட்டி ஒன்று சமீபத்தில் வைரலானது. அதில், ``நான் அதிகாலை 3 மணிக்கு தூங்குவேன். காலை 11:30 - 12 மணிக்குள் எழுந்துவிடுவேன். அதன் பிறகு என் தினசரி வேலையைத் தொடங்குவேன். எனது தூக்க அட்டவணையை எந்த நிலையிலும் மாற்றுவதில்லை. என் உடல் தனது வேலை அட்டவணையில் ஏற்படும் எந்த மாற்றங்களாலும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். என் மிகச் சரியான தூக்கம், உடற்பயிற்சி போன்றவை என் புத்துணர்ச்சிக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்." என்றார்.

ஜூலை 21 அன்று ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் உரையாற்றிய தோனி, ``இந்தியர்களாகிய நமது சராசரி உடற்பயிற்சி, உடற்செயற்பாடுகள் குறைந்துவிட்டன. அதனால், இப்போதெல்லாம் நம் ஆயுள் காலம் குறைந்து வருகிறது.

M S Dhoni - எம்.எஸ் தோனி
M S Dhoni - எம்.எஸ் தோனி

என் மகளும் கூட... அவள் அதிக உடல் செயல்பாடுகளைச் செய்வதில்லை என்று நினைக்கிறேன். நம்மில் நிறையப் பேர் விளையாடுவதில்லை. என் மகளும் விளையாட்டில் ஈடுபடுவதில்லை. எனவே (உடல் ரீதியாக) சுறுசுறுப்பாக இருக்கும் விஷயங்களை நாம் திட்டமிட வேண்டும். அதற்காக நாம் நேரம் ஒதுக்க வேண்டும்" எனத் தெரிவித்திருந்தது வைரலானது குறிப்பிடதக்கது.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.