Rashmika: டியர் டைரி என்ற வாசனைத் திரவிய பிராண்டை தொடங்கிய நடிகை; விலை என்ன தெரியுமா?

இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா, தனது முதல் தொழில்முனைவு முயற்சியாக டியர் டைரி என்ற வாசனைத் திரவிய பிராண்டை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இந்த பிராண்ட், அவரது தனிப்பட்ட நினைவுகள் மற்றும் வாழ்க்கை அனுபவங்களால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய பிராண்ட் மேம்பாட்டு நிறுவனமான The PCA Companies உடன் இணைந்து டியர் டைரி பிராண்ட் உலகளவில் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.

‘டியர் டைரி’ என்ற வாசனைத் திரவியங்கள், இளமை, மகிழ்ச்சி மற்றும் உணர்ச்சிகரமான பயணங்களை வெளிப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஷ்மிகா, இந்த தயாரிப்பு குறித்து பேசுகையில், “ஒவ்வொரு வாசனையும் எனது வாழ்க்கையின் ஒரு பகுதியைப் பிரதிபலிக்கிறது. இது என் ரசிகர்களுடன் என் இதயத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு வழி,” என்று கூறினார்.

இந்த பிராண்டில் உள்ள ஒவ்வொரு வாசனையும் இந்தியாவின் பாரம்பரிய மணங்களான மல்லிகை, இளஞ்சிவப்பு தாமரை, கரும்பு, லைச்சி போன்றவற்றைப் பயன்படுத்தியுள்ளனர். நேஷனல் க்ரஷ், இர்ரிபிளேஸபிள், காண்ட்ரவர்ஷியல் போன்ற வாசனைகள் ராஷ்மிகாவின் வாழ்க்கையின் முக்கிய தருணங்களை பிரதிபலிக்கின்றன.

இந்த வாசனை திரவியம் 100 மி.லி 2,599 ரூபாய்க்கும், 10 மி.லி 599 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.