எந்த டிகிரினாலும் ஓகே; இந்தியன் வங்கியில் காத்திருக்கிறது வங்கி பயிற்சி பணி!

இந்தியன் வங்கியில் பயிற்சி வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

என்ன பணி?

அப்ரண்டிஸ். இது ஓராண்டு கால ஒப்பந்தம் ஆகும்.

மொத்த காலிபணியிடங்கள்: 1,500; தமிழ்நாட்டில் 277, புதுச்சேரியில் 9.

வயது வரம்பு: குறைந்தபட்சம் 20; அதிகபட்சம் 28 (சில பிரிவினருக்கு தளர்வுகள் உண்டு)

சம்பளம்: மெட்ரோ அல்லது நகர்ப்புறம் - ரூ.15,000

ஊரகப் பகுதி அல்லது சிறு நகரம் - ரூ.12,000

இந்தியன் வங்கி

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி

எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்?

ஆன்லைன் எழுத்துத் தேர்வு, உள்ளூர் மொழித் திறன் தேர்வு, நேர்காணல்.

தமிழ்நாட்டில் தேர்வு மையங்கள் எங்கே?

சென்னை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி, வேலூர், கோவை, விருதுநகர், தஞ்சாவூர்.

புதுச்சேரி.

விண்ணப்பிக்கும் இணையதளம்: ibpsonline.ibps.in

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 7, 2025

மேலும், விவரங்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் நண்பர்கள், உங்களுக்குத் தெரிந்தவர்களுக்கு இந்தச் செய்தியைப் பகிருங்கள்!

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.