டீசலுக்கு நிகராக உயர்ந்த சிஎன்ஜி எரிபொருள் விலை: தட்டுப்பாடு நிலவுவதால் தேடி அலையும் ஆட்டோ ஓட்டுநர்கள்
சென்னை: சென்னையில் சிஎன்ஜி விலை டீசலுக்கு இணையாக உயர்ந்த நிலையில், தட்டுப்பாடும் நிலவுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சுற்றுச்சூழல் மாசுபாடு விவகாரத்தில், ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பை ஏற்படுத்துவது, அதிக மைலேஜ் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாடு தழுவிய அளவில் சிஎன்ஜி வாகனங்களுக்கு வரவேற்பு நிலவுகிறது.
இதனால் டீசல், பெட்ரோல் வாகனங்களையும் சிஎன்ஜியில் பயன்படுத்தும் வகையில் மாற்றியமைக்கப்படுகின்றன. இதற்கான தெளிவான வழிகாட்டுதல்களையும் தமிழக போக்குவரத்துத் துறை வழங்கியுள்ளது. அதேநேரம், சென்னையில் தொடர்ச்சியாக சிஎன்ஜி விலை உயர்ந்து வருவதோடு, தட்டுப்பாடும் நிலவுவதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

