விண்வெளி ஆய்வு நிறைவு - வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார் ஷுபன்ஷு சுக்லா!

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர். அமெரிக்​கா​வின் கலிபோர்போனியா அருகே பசிபிக் கடலில் விண்கலம் பத்திரமாக இறங்கியது.

ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 விண்​வெளி வீரர்​களும் நேற்று மாலை 4.35 மணிக்கு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் இருந்து டிராகன் விண்​கலத்​தில் பூமிக்கு புறப்​பட்​டனர். சுமார் 23 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு டிராகன் விண்​கலம் இந்திய நேரப்படி மாலை 3 மணி அளவில் பூமியை வந்​தடைந்தது. அமெரிக்​கா​வின் கலி​போர்​னியா மாகாணம் பசிபிக் கடலில் விண்​கலம் இறங்கியது. சுமார் 5.5 கி.மீ. உயரத்​தில் பாராசூட்​கள் விரிக்​கப்​பட்டு விண்கலம் கடலில் பாது​காப்​பாக இறக்​கப்​பட்டது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.