``சாப்பாடு போடுறோம்; ஆனா, ஓட்டு போட மாட்டோம் -பாஜக தொண்டர் பேச்சால் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி
தமிழகம் முழுவதும் பாஜக பூத் கமிட்டி அமைத்து வருகிறது. இந்நிலையில், விருதுநகரில் திடீரென பூத் கமிட்டி ஆய்வுக்கு அக்கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வருகை தருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், விருதுநகர் ரோசல்பட்டி சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே அவர் பூத் கமிட்டி ஆய்வுக்கு வந்தார். அப்போது அங்கு வந்த பாஜக தொண்டர் ஒருவர், “நீங்கள் தேர்தலில் நில்லுங்கள், உங்களுக்கு சாப்பாடு கூட போடுறோம். ஆனால், ஓட்டுப் போட மாட்டோம் என எல்லாரும் சொல்றாங்க“ என நயினார் நாகேந்திரனிடம் திடீரென தெரிவித்தார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத நயினார் நாகேந்திரன் பெரும் அதிர்ச்சியடைந்தார். அப்போது குறுக்கிட்ட பாஜக நிர்வாகிகள், அதை பிறகு பேசிக் கொள்ளலாம் எனக் கூறி சமாளித்து அவரை திருப்பி அனுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

