Assam: இன்று முதல் எனக்கு விடுதலை - மனைவியிடமிருந்து விவாகரத்து; 40 லிட்டர் பாலில் குளித்த கணவர்

அஸ்ஸாம் மாநிலத்தில் ஒருவர் தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றதை, 40 லிட்டர் பாலில் குளித்துக் கொண்டாடும் வீடியோ வைரலாகியிருக்கிறது.

இந்த வீடியோ குறித்து வெளியான தகவலின்படி, அந்த வீடியோவில் வருபவரின் பெயர் மாணிக் அலி (32).

இவர் நல்பாரி மாவட்டத்தில் முகல்முவா என்ற கிராமத்தில் வசித்து வருகிறார்.

மாணிக் அலி

மாணிக் அலி தனது மனைவியிடமிருந்து சட்டப்பூர்வமாக விவாகரத்து பெறுவதற்குத் தயாராக இருந்தார்.

இந்த நிலையில்தான், தனது மனைவியிடமிருந்து தனக்கு விவாகரத்து கிடைத்த செய்தியை தன் வழக்கறிஞர் மூலம் அறிந்திருக்கிறார்.

மாணிக் அலி அந்தச் சந்தோஷத்தில் 40 லிட்டர் பாலில் குளித்து விவகாரத்தைக் கொண்டாடியிருக்கிறார்.

Assam Man Milk Bath After Divorce With His Wife | భార్యతో విడాకులు.. 40 లీటర్ల పాలతో భర్త స్నానం #assamman #milkbath #husbandandwife #divorce #viralvídeo #latestnews #andhraprabha #andhraprabhanews pic.twitter.com/Mkly7QO7iY

— Andhra Prabha News (@andhraprabha_) July 13, 2025

அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிக்கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவில், "இன்று முதல் நான் விடுதலையடைந்துவிட்டேன்.

அவர் (மனைவி) தன் காதலனுடன் வீட்டை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தபோதும் குடும்பத்தின் அமைதிக்காக நான் மௌனமாக இருந்தேன்.

நேற்றுதான் என் வழக்கறிஞர், விவாகரத்து முடிவாகிவிட்டதாக என்னிடம் தெரிவித்தார்.

எனவேதான், என்னுடைய சுதந்திரத்தைக் கொண்டாட பாலில் குளிக்கிறேன்" என மாணிக் அலி பேசியுள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.