Ahmedabad Plane Crash: இரவில் திடீர், திடீரென விழித்துக்கொள்கிறார் -உயிர் தப்பிய நபர் படும் அவஸ்தை

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த ஜூன் 12-ம் தேதி ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மருத்துவக் கல்லூரி வளாகக் கட்டடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், விமானத்தில் பயணத்தில் 242 பேரில் ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்தனர்.

உயிர் பிழைத்த அந்த ஒருவர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளி விஸ்வாஸ் (40 வயது).

Ahmedabad plane crash

அதே சமயம், உயிரிழந்த 241 பேரில் அவரது சகோதரர் அஜய்யும் ஒருவர்.

இந்த நிலையில் அதிர்ஷ்டவசமாக விஸ்வாஸ் உயிர்பிழைத்திருந்தாலும் அந்த விபத்தின் அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் அவர் தவிக்கிறார்.

இது குறித்துப் பேசியிருக்கும் விஸ்வாஸின் உறவினர் சன்னி, "வெளிநாட்டில் வசிக்கும் எங்கள் உறவினர்கள் உட்படப் பலரும் விஸ்வாஸ் குறித்து நலம் விசாரிக்க எங்களுக்கு போன் செய்கிறார்கள்.

ஆனால், அவர் யாரிடமும் பேசுவதில்லை. அந்த விபத்து மற்றும் தனது சகோதரரின் மரணத்தால் ஏற்பட்ட மன அதிர்ச்சியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை.

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே நபர் விஸ்வாஸ்
ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்பிழைத்த ஒரே நபர் விஸ்வாஸ்

நடு இரவில் திடீர் திடீரென விழித்துக்கொள்கிறார். அதன்பிறகு அவர் மீண்டும் தூங்குவதே கடினமாக இருக்கிறது.

இதற்கு ஒரு தீர்வு காண இரண்டு நாள்களுக்கு முன்பு ஒரு மனநல மருத்துவரிடம் அவரை அழைத்துச் சென்றோம்.

அவருக்கு சிகிச்சை தொடங்கப்பட்டிருப்பதால், லண்டனுக்குத் திரும்புவதற்கான எந்தத் திட்டமும் இப்போது இல்லை" என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.