`StartUp சாகசம் 32: `அந்த தொழில்நுட்பத்தை Google ரொம்ப பாராட்டினாங்க’ - Save Mom சக்சஸ் ஸ்டோரி
தாய் சேய் இறப்பு விகிதம் (MMR) ஒரு நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பு மற்றும் சமூக-பொருளாதார ஸ்திரத்தன்மையின் முக்கிய அளவுகோலாகும். இந்தியாவில், தாய் சேய் ஆரோக்கியத்தில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், பொது சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள நேர்மறையான தாக்கத்தை எடுத்துக்காட்டுகின்றன.
இந்தியாவின் தேசிய MMR 2014-16 இல் ஒரு லட்சம் குழந்தைகளில் 130 இறப்பாக ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவே 2020-22 இல் ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 88 ஆகக் குறைந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மதிப்பீடுகளின்படி, 2023 இல் இது ஒரு லட்சம் குழந்தைகளுக்கு 80 ஆக மேலும் குறைந்துள்ளது. 2030 ஆம் ஆண்டிற்குள் ஒரு லட்சம் உயிருள்ள குழந்தைகளுக்கு இறப்பு விகிதம் 70 என்ற நிலையான வளர்ச்சி இலக்கை அடைவதற்கு இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.
இந்தியாவிற்கே தமிழ்நாடு இந்த முன்னேற்றத்தில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது. தமிழ்நாட்டின் MMR 2018-20 இல் 54 ஆக இருந்து, 2023-24 இல் 45.5 ஆகக் குறைந்துள்ளது. இது தேசிய சராசரியை விட மிகக் குறைவாக இருப்பதோடு, SDG இலக்கையும் ஏற்கனவே அடைந்துவிட்டது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிரசவத்திற்குப் பின் ஏற்படும் இரத்தப்போக்கு போன்ற பொதுவான காரணிகளைக் கண்டறிந்து நிர்வகிப்பதில் நமது மாநிலத்தின் மிக கவனமாக இலக்கு சார்ந்து செயல்படுகிறது.
தமிழ்நாட்டில் இருந்து பல புதுத்தொழில் நிறுவனங்கள் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இதற்கான கட்டமைப்புகளை உருவாக்கி இந்தியாவிற்கே ஏன் உலகத்திற்கு புது மாதிரியாக விளங்கிவருகின்றன. இதனால் ஆரோக்கியமான தாய்மார்கள் மற்றும் குழந்தைகள் எதிர்காலத் தலைமுறைக்கு அடித்தளமிடுகிறார்கள். சமூக ஸ்திரத்தன்மையை அதிகரிக்கிறது. தாய் சேய் நலன் சார்ந்த டிஜிட்டல் சுகாதாரத் தீர்வுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இது சமூக நலன் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டிற்கும் வழிவகுக்கும்.
தமிழ்நாட்டிலின் மதுரையில் இருந்து JioVio Healthcare நிறுவனத்தின் சேவ்மாம் (Save Mom) எனும் அணியக்கூடிய கருவிகள் (Wearable Device) ஒன்றை பொருத்தி அதன் வழியே கர்ப்பிணி தாய்மார்களின் உடல் நலத் தகவல்களைத அவ்வப்போது அதற்கான மென்பொருளில் பதிவதால் மருத்துவர்கள் கண்காணிப்பில் கர்ப்பிணி தாய்மார்கள் இருப்பார்கள். ஏதேனும் சிக்கல் ஏற்பட்டால் அவர்களுக்கு துல்லியமான கண்காணிப்பை வழங்கி குழந்தை பிறப்பதை மகிழ்ச்சியாக அதே சமயம் ஆரோக்கியமாக பிறக்கவைக்கவேண்டும் என்பதில் கவனமாக செயல்படுகிறார்கள். அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி செந்தில்குமார் முருகேசன் அவர்களிடம் சேவ் மாம் வளர்ந்த கதையை கேட்போம்...
"தாய்மார்கள் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தைகளின் உடல்நலத்தில் உள்ள குறிப்பிட்ட இடைவெளிகள் அல்லது சவால்களில் எவை உங்களை இந்த தீர்வை உருவாக்க ஊக்கப்படுத்தின? இந்த யோசனையைத் தூண்டிய தனிப்பட்ட அல்லது களப்பணி அனுபவம் ஏதேனும் இருந்ததா?"
``வணக்கம், என்னோட பேரு செந்தில்குமார். நான் சேவ் மாம் (SAVE MOM) நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இருக்கிறேன், சேவ் மாம் (SAVE MOM) கர்ப்பமான பெண்களுக்கு அணியக்கூடிய ஒரு கருவியை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைக்கொண்டு உருவாக்கியிருக்கிறோம்.
அதன் வழியாக உலக சுகாதார மையம் அனுமதித்துள்ள சில உடல்நலம் சார்ந்த தகவல்களைப் பெற்று கர்ப்பிணிப் பெண்கள் ஆரோக்கியமாக குழந்தை பிறக்க தொழில்நுட்பம் வழியே உதவுகிறோம்.
சேவ் மாம் (SAVE MOM) ஐடியா வர காரணம் என் சகோதரி, முதன்முதலில் அவர்கள் கர்ப்பிணி ஆனபோது அவர்களிடமிருந்துதான் எனக்கு அந்த எண்ணம் தோன்றியது.
நான் அவங்ககிட்ட கவனித்தது என்ன அப்படின்னா, ஒரு கர்ப்பிணிப் பெண் மருத்துவமனைக்குப் போறாங்க, அப்போ மருத்துவரைப் பார்க்க போகும்போது குறைந்தபட்சம் 5-6 மணி நேரம் காத்திருக்கவேண்டியதிருக்கும், அப்படின்னா ஒரு 70, 80 கர்ப்பமான பெண்கள் காலைல 9 மணிக்கு வராங்க.
மத்தியானம் 3 மணி வரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. அப்ப எனக்குத்தோன்றியது என்னோ தொழில்நுட்பம் வழியாக அவர்கள் பரிசோதனையை உடனுக்குடன் மருத்துவருக்குத் தெரியப்படுத்தினால் என்ன ?என்று தோன்றியது. ஏன்னா நான் செமி கண்டக்டர் துறையில் வேலை பார்த்திருக்கிறேன், எங்கத்துறையில் எல்லா விஷயத்தையும் வந்து நிறைய ஆட்டோமேஷன் பண்ணுவோம்.

தொடர்ந்து திரும்பப் பயன்படுத்தும் விஷயங்களுக்கு ஆட்டோமேஷன் பண்ணுவோம். ஆனா மருத்துவத்துறையில் அப்படியில்லை, எனவே ஏன் இப்படி செய்யக்கூடாதுன்னு என தோணுச்சு, ஆனால் இதற்காகவே உலக சுகாதார மையம் கர்ப்பிணிப் பெண்களிடம் சில தகவல்களை எடுக்கும் வழிவகை செய்திருந்தது, எனவே அதை மையமாக வைத்தே செயல்பட்டோம்.
என்னோட முக்கிய இலக்கு என்னவா இருந்தது என்றால் கர்ப்பிணித் தாய்மார்கள் ஒரு மணி நேரத்துக்குள்ள பரிசோதனை முடிச்சுட்டு வீட்டுக்கு போயிரணும்.
அந்த மாதிரி பண்ண முடியுமா அப்படின்றதுக்குதான் இந்த சேவ் மாமை (SAVE MOM) நான் முதல்முதலில் ஆரம்பித்தேன்.”
``பிரச்னை தெளிவாக இருந்தபோது,உங்கள் தீர்வுகளுக்கு இந்தியாவில் என்ன மாதிரியான வாய்ப்புகள் இருந்தது?”
``இதுல இன்னொரு பெரிய பிரச்சனை என்ன அப்படின்னா, உலக சுகாதார மையம் (WHO) கர்ப்பமான தாய்மார்கள் தொடர்ந்து மாதம் மாதம் பரிசோதனைக்கு வரணும் அதாவது எட்டு செக்கப் கண்டிப்பா வந்துரணும் அப்படின்றதுதான் WHO-வோட பரிந்துரை.
அவங்க சரியா பரிசோதனைக்கு வந்துட்டாங்க என்றால் அப்போது தாய்/சேய் ஏதாவது பிரச்னை என்றால் நம்ம முன்னாடியே கண்டுபிடித்து அதற்கான மாற்றைத் தேடலாம். அதேபோல் பிரசவத்துக்கு முன்பு ஏதேனும் பிரச்சனை இருந்தால் முன்னாடியே கண்டுபிடிச்சுரலாம்.
ஆனால் இந்தியால என்ன பிரச்சனை நடக்குது என்றால், கர்ப்பமான பெண்கள் மூணு பரிசோதனைக்கு மேல வரமாட்டேன்றாங்க. அது என்னன்னா அரசின் பதிவு ஏட்டில் பதிவு பண்றதுக்கு வராங்க, அதுக்கடுத்து பிரசவத்துக்குத்தான் வராங்க. அதுக்கப்புறம் அவங்களுக்கு என்ன நடந்தாலும் தெரிய மாட்டேங்குது.
நிறைய மலைவாழ் மக்கள், கிராம மக்களை எல்லாம் பார்க்கும்போது இந்த பரிசோதனை எண்ணிக்கை ரொம்ப ரொம்ப குறைவா இருக்கு.

சோ, என்னோட சகோதரியை வைத்து இந்த தொழில்நுட்பத்தை ஒரு முன்னோடி திட்டமா உருவாக்கினேன்.
இந்தியாவில் பிரசவத்தின்போது தாயோ அல்லது சேயோ இறக்கும் எண்ணிக்கை அதிகமாக இருக்கு என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. உலகத்துலயே இந்தியாலதான் அதிகமான குழந்தைகள் பிறக்குது.
அதே சமயம் பிரசவ இறப்பைக் குறைப்பதுதான் என்னோட நோக்கமா இருந்தது. சில மலை கிராமத்துல போய் மக்களிடம் பேசும்போது எனக்கு ஒரு விஷயம் புரிந்தது.
என்னன்னா இந்த பரிசோதனைக்கு நான் மருத்துவமனைக்கு வீட்ல இருந்து ஒரு 30-60 கிலோமீட்டர் பயணிக்கணும். எப்படியிருந்தாலும் ஒரு எட்டு மணி நேரம் ஆயிடுது.
நான் வீட்டுக்கு வந்துட்டேன்னா எங்க வீட்ல வந்து குழந்தைய பாத்துக்கறதுக்கோ அல்லது சாப்பாடு பண்றதுக்கோ யாருமே இல்லை.
அப்போ ஒரு நாள் முழுதா குழந்தைங்க சாப்பிடாம இருக்க வேண்டியதா இருக்கு. அதனால அவங்க குழந்தைகளுக்காக தங்களோட பரிசோதனைகளை தவிர்க்கறாங்க.
அதனால் இந்த பிரச்சனையை நான் முழுதாக புரிந்துகொண்டேன். என்னோட சகோதரிக்கு செய்த மாதிரி, ஒரு மணி நேரத்துக்குள்ள இந்த செக்அப்ப பண்ணி முடிச்சிட்டால் அவங்களால வீட்டுக்கு போக முடியும்.
அவங்களால தொடர்ந்து எல்லா மாதமும் பரிசோதனைக்கும் வர முடியும். அப்படி யாராவது பெண்கள் செக்கப்புக்கு வர மிஸ் பண்ணிட்டா கூட, எங்க தொழில்நுட்பத்த வச்சு அவங்க வீட்டுக்கு போயே இந்த பரிசோதனை கொடுக்குற அளவுக்கு ஒரு நுட்பமான மாடலைதான் நாங்க உருவாக்கினோம்.”
``கிராமப்புறங்களில் அல்லது சேவை குறைவாக உள்ள பகுதிகளில் உங்கள் தீர்வை அமல்படுத்தும்போது நீங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய தடைகள் எவை, அவற்றை எவ்வாறு சமாளித்தீர்கள்?"
``நாங்கள் கிராமங்களில் பணிபுரியும்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டோம். அங்கு எங்களின் திட்டங்களுக்கு ஏற்புத்தன்மை மிகக் குறைவாக இருந்தது.
இருப்பினும், நாங்கள் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று, அங்குள்ள மாவட்ட சுகாதார அதிகாரிகளுடன் பேசி, திட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கினோம். இவ்வாறு செயல்படும்போது பல சவால்களைச் சந்தித்தோம்.
முதலாவதாக, ஒரு தொழில்நுட்ப கட்டமைப்பை உருவாக்க வேண்டியிருந்தது. கிராமங்களில் நாங்கள் எதிர்கொண்ட மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்று, கர்ப்பிணிப் பெண்கள் சரியான நேரத்தில் மருத்துவ பரிசோதனைக்கு வராததுதான்.
உதாரணமாக, இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஒரு தாயின் வீட்டிற்குச் சென்று விசாரித்தோம்.
முதல் குழந்தை என்ன ஆனது என்று கேட்டபோது, ஏழாவது மாதத்தில் குழந்தையின் இதயத்துடிப்பு நின்று குழந்தை இறந்துவிட்டதாகத் தெரிவித்தார். இது அவர்களுக்கு இரண்டாவது குழந்தை.
என்ன காரணத்தால் குழந்தை இறந்தது என்பதை அறிய, அவர்கள் குறிப்பிட்ட அடிப்படை சுகாதார நிலையத்திற்குச் சென்று பார்த்தோம்.
அங்கு பார்த்தபோது எங்களுக்குப் பேரதிர்ச்சி ஏற்பட்டது. அங்கு எம்.சி.பி எனப்படும் ஒரு அட்டை இருந்தது. இதைத் தாய் அட்டை என்று சொல்வார்கள்.
இந்த அட்டையில், ஒரு பெண் எப்போது கர்ப்பமானார், குழந்தை எப்போது பிறந்தது, எத்தனை முறை பரிசோதனைக்கு வந்தார், ஒவ்வொரு பரிசோதனையிலும் அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் எப்படி இருந்தன என்பவை அனைத்தும் முழுமையாகப் பதிவு செய்யப்படும். ஆனால் அந்தப் பெண்ணின் சில தகவல்கள் முழுமையாகப் பதிவு செய்யப்படவில்லை.
கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்குத் தொடர்ந்து வருவதில்லை. ஆனால் அரசுக்கு இந்தப் பெண்கள் தொடர்பான தகவல்கள் தேவைப்படுகின்றன.

இந்தத் தகவல்களை அளித்தால் அரசு அவர்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. இதனால் சுகாதாரத் துறையில் உள்ளவர்கள், எல்லாத் தகவல்களையும் முழுமையாகப் பதிவேற்ற வேண்டியது மிக அவசியம்.
இதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அரசு நிறைய மானியங்கள், உதவிகள், ஊட்டச்சத்துப் பொருட்கள் எனப் பலவற்றை வழங்குகிறது.
ஆனால், தாங்கள் வழங்கும் உதவிகள் இந்த பெண்களுக்கு உண்மையாகவே சென்றடைகிறதா என்பதைச் சரிபார்க்க எந்த ஒரு தொழில்நுட்பமும் அரசிடம் இல்லை. தகவல்கள் தவறாகப் பதிவு செய்யப்பட்டாலும் அவர்களுக்குத் தெரியாது.
இதற்கு ஒரு யோசனையை நாங்கள் சிந்தித்தோம். ஒவ்வொரு கர்ப்பிணிப் பெண்ணுக்கும் ஒரு அணியக்கூடிய கருவியைக் (wearable device) கொடுப்போம்.
இந்தக் கருவி ஒரு மாதம் முழுவதும் அவர்களின் உடல்நலத் தகவல்களை முழுமையாகக் கண்காணிக்கும்.
அவர்கள் மருத்துவமனைக்கு வரும்போது, அங்கு ஒரு கியாஸ்க் (kiosk) போன்ற அமைப்பை நாங்கள் நிறுவியிருப்போம்.
இந்தக் கருவியும், மருத்துவமனையில் உள்ள அமைப்பும் ஒன்றையொன்று சரிபார்த்து, உண்மையிலேயே இந்த பெண்தான் வந்திருக்கிறாரா என்பதை உறுதி செய்யும்.
முக அடையாளம் காணும் தொழில்நுட்பத்தைப் (face recognition technology) பயன்படுத்தி, அந்தப் பெண் உண்மையிலேயே வந்திருக்கிறாரா என்பதை நாங்கள் கண்டறிவோம்.
அதன் பிறகு, ஒரு மாதத்திற்கான அவர்களின் அனைத்து உடல்நலப் பதிவுகளும் அந்தக் கருவியிலிருந்து டிஜிட்டல் வடிவில் எங்களுக்குக் கிடைத்துவிடும்.
இதன் மூலம், யாரும் தகவல்களைத் தவறாகப் பதிவு செய்ய முடியாது. கர்ப்பிணிப் பெண்கள் மருத்துவமனைக்கு வந்தால்தான் அவர்களின் தகவல்கள் கிடைக்கும். இல்லையென்றால் கிடைக்காது.
டாக்டர் கொடுக்கும் எல்லா மருத்துவத் தகவல்களையும் நாங்கள் டிஜிட்டல் மயமாக்கி அதற்கான ஊட்டச்சத்து அனைத்தையும் அவர்களுக்குக் கொடுக்க ஆரம்பித்துவிடுவோம்.
ஒருவேளை இந்தத் தாய்மார்களால் வர முடியவில்லை என்றால், எங்கள் சிஸ்டம் ஒரு டாஷ்போர்டில் இந்த மாதம் இந்தப் பெண்கள் எல்லாம் வரவில்லை என்று தரவுகளை உருவாக்கிவிடும்.
இந்தத் தகவலை மீண்டும் கிராம அளவில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு அனுப்பிவிடுவோம். இப்போது அவர்கள் அவர்களின் வீட்டிற்குச் செல்ல வேண்டும். அவர்களிடம் ஒரு மொபைல் போன் இருக்கும்.
அதனைக் கொண்டு அவர்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும். இப்போது அந்தச் சாதனமும் அவர்கள் கையில் கட்டியிருக்கும் சாதனமும் அருகருகே இருந்தால் மட்டுமே அந்தப் பரிசோதனை நிறைவடையும்.
இதனை பிளாக் அளவிலும், மாவட்ட அளவிலும் உள்ள ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் நாங்கள் அப்டேட் செய்வோம்.
இந்த சிஸ்டத்தில் தகவல்களை நேரடியாக உள்ளிட முடியாது என்பதால், உண்மையிலேயே அந்தப் பராமரிப்பு அந்தப் பெண்களுக்குத்தான் கிடைத்தது என்பதை எங்களால் திறம்பட உறுதிப்படுத்த முடிந்தது. இதை நாங்கள் அங்கு வெற்றிகரமாகச் செய்தோம்.
நாங்கள் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும்போது பல்வேறு சவால்கள் ஏற்பட்டன. ஆரம்பத்தில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஒரு கைக்கடிகாரம் போன்ற கருவியைக் கொடுத்திருந்தோம்.
ஒரு மாதம் கழித்து அந்தக் கருவியில் பதிவான தரவுகளை நாங்கள் ஆராய்ந்தபோது, ஒரு நாளைக்கு 50,000 அடிகள் நடப்பதாகவும், பல தீவிரமான செயல்பாடுகளைச் செய்வதாகவும் தரவுகள் காட்டின.
ஆனால், அந்தப் பெண்கள் எட்டாவது மாத
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

