வேள்பாரி வெற்றிப் பெருவிழாவில் ரஜினி, ஷங்கர்... | Velpari Celebration Event | Su.Venkatesan

வேள்பாரி வெற்றிப் பெருவிழாவில் ரஜினி, ஷங்கர்

LIVE : Velpari Celebration Event | Su.Venkatesan, Rajinikanth, Shankar, Gopinath |வேள்பாரி |Vikatan

வேள்பாரி வெற்றிப் பெருவிழா

வேள்பாரி வெற்றிப் பெருவிழாவில் சு.வெங்கடேசன்

விகடன் பிரசுரத்தில், எம்.பி-யும், எழுத்தாளருமான சு.வெங்கடேசன் எழுத்தில், மணியம் செல்வனின் ஓவியங்களில் வெளியாகி, மக்களின் மனதைக் கவர்ந்த நூல் ‘வீரயுக நாயகன் வேள்பாரி.’

இந்தப் புத்தகம் ஒரு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்பனையில் வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறது. இதைக் கொண்டாடும்விதமாக இந்தப் புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா இன்று (ஜூலை 11) மாலை 5:30 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.

வேள்பாரி வெற்றிப் பெருவிழா!
வேள்பாரி வெற்றிப் பெருவிழா!

இந்த நிகழ்ச்சியில் ஆனந்த விகடன் நிர்வாக இயக்குநர் திரு பா.சீனிவாசன் வரவேற்புரை ஆற்றவிருக்கிறார். தொகுப்பாளர் கோபிநாத், திரைக்கலைஞர் ரோகிணி, தமிழ்நாடு அரசு நிதித்துறைச் செயலாளர் திரு. த.உதயச்சந்திரன், திரைப்பட இயக்குநர் ஷங்கர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கவிருக்கின்றனர்.

‘வேள்பாரி 1,00,000’ வெற்றிச் சின்னத்தைத் திறந்துவைத்து, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புரை ஆற்றவிருக்கிறார். இந்த நாவலைப் படைத்த எழுத்தாளரும், எம்.பி-யுமான சு.வெங்கடேசன் வெற்றி விழா உரை ஆற்றவிருக்கிறார்.

ஒரு லட்சம் பிரதிகளைக் கடந்து விற்பனையாகியிருக்கும், ‘வீரயுக நாயகன் வேள்பாரி புத்தகத்தைக் கொண்டாடும்விதமாக இந்தப் புத்தகத்தின் வெற்றிப் பெருவிழா இன்று (ஜூலை 11) மாலை 5:30 மணிக்கு, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது. அதற்கான நிகழ்வில் பங்கேற்கும் வாசகர்கள், சிறப்பு விருந்தினர்கள் அரங்குக்குள் வந்துகொண்டிருக்கிறார்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.