Bengaluru: சாலையில் அனுமதி இன்றி பெண்களை வீடியோ எடுத்த இன்ஃப்ளூயன்சர்... காவல்துறை எடுத்த நடவடிக்கை!

இன்ஸ்டாகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வீடியோக்களைப் பதிவிட்டு வரும் பலர், அனுமதியின்றி சாலைகளில் இருக்கும் பெண்களை, குழந்தைகளை வீடியோ எடுத்துப் பதிவிடுவது தொடர்ந்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது.

அவ்வகையில் பெங்களூரு சர்ச் சாலை, கோரமங்களா பகுதியில் இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர் ஒருவர் பெண்களை அனுமதியின்றி வீடியோ எடுத்து Videos Of Bengaluru Women என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வேகமாக பரவ, வீடியோவில் இருக்கும் பெண்கள் குறித்த ஆபாசமான கமெண்ட்கள் வரத் தொடங்கியிருக்கின்றன.

சர்ச்சையான வீடியோ

இதைக் கண்ட அந்த வீடியோவில் இருக்கும் பெண் ஒருவர், "சும்மா தெருக்களை வீடியோ எடுக்கிறேன் என்ற பெயரில் பெண்களை பின்தொடர்ந்து, ரகசியமாக வக்கிரமான எண்ணத்துடன் வீடியோ எடுத்தார் இந்த நபர். அனுமதியின்றி இப்படி பெண்களை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். காவல்துறை இந்த நபரைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தனது சமூகவலைதளப் பக்கத்தின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதை கவனத்தில் எடுத்துக் கொண்ட பெங்களூரு காவல்துறை இதுபோன்ற வீடியோக்களைப் பதிவிட்ட 26 வயதாக குர்தீப் சிங் என்பவரைக் கண்டறிந்து கைது செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இவர் பெங்களூருவின் கே.ஆர் புரம் பகுதியில் வசிப்பதாகவும், சகோதரருடன் வசித்து வரும் அவரை காவல்துறை கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சர்ச்சையான வீடியோ

இன்ஸ்டாகிராம் மெட்டா நிறுவனத்தில் இதுதொடர்பான வீடியோக்களையும், சர்ச்சைக்குரிய அக்கவுண்டுகளையும் நீக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், இதுபோன்று சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய வகையில் வீடியோக்களைப் பதிவிடும் நபர்களை பட்டியலிட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் கூறியிருக்கிறது பெங்களூரு காவல்துறை.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...  https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...  https://bit.ly/3PaAEiY

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.