ஆஸ்திரேலியாவிடம் இருந்து அரிய கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை
புதுடெல்லி: ஆஸ்திரேலியாவிடமிருந்து அரிய கனிம வகைகளை பெற இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. ஆஸ்திரேலிய நாட்டில் செம்பு, யுரேனியம் போன்ற அரிய வகை கனிமங்கள் உள்ளன. சமாரியம், கடோலினியம், தெர்பியம், டைஸ்ப்ரோசியம், லுடேடியம் போன்ற கனிமங்கள் எலக்ட்ரிக் மோட்டார், பிரேக்கிங் சிஸ்டம்ஸ், செல்போன்கள், ஏவுகணை தயாரித்தலுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, அவற்றை வெளிநாடுகளில் இறக்குமதி செய்து இந்தியா பயன்படுத்தி வருகிறது. அதேபோல் ஆஸ்திரேலியாவில் கிடைக்கும் அரிய வகை கனிமங்களை இறக்குமதி செய்வது தொடர்பாக ஆஸ்திரேலிய நாட்டு அரசுடன் இந்திய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

